அதிமுக கிளிப்பிள்ளை போல செயல்படுகிறது என திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியீடு, வேட்புமனுத் தாக்கல், தேர்தல் பிரசாரம் என அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்கள் பணிகளை செய்துவருகின்றன.
பாஜக - அதிமுக கூட்டணி குறித்து பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், “ என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிருப்தியில் உள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இது மிகவும் பலவீனமான கூட்டணியாக உள்ளது. மத்திய அரசிடமிருந்து வரும் வழிகாட்டுதல்களை மட்டுமே அதிமுக செயல்படுத்தி வருகிறது என்பது எங்கள் நிலைப்பாடாக உள்ளது.
மேலும், தமிழகத்தின் உண்மையான பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல், தங்களுக்கு வழங்கப்படும் செயல்திட்டங்களை கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பச் சொல்கிறது அதிமுக” என அவர் விமர்சித்துள்ளார்.
Summary
MP Tamilachi Thangapandian has said that the AIADMK is acting like a hawk.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமதிப்பிழப்பு போல தொகுதி மறுசீரமைப்பும் தோல்வியில் முடியும்

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படுமா? திமுக எம்.பி. கேள்வி

தமிழகத்தை பெண்களின் நம்பிக்கை கோட்டையாக மாற்றியவா் முதல்வா்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



