மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!

திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ மற்றும் முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் (கோப்புப் படம்) - எக்ஸ்

Updated On :25 மார்ச் 2026, 5:17 pm

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ மற்றும் முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகளின் தலைமையில் 4 முனைப் போட்டி நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், எஸ்டிபிஐ மற்றும் நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை (மார்ச் 25) அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விரண்டு கட்சிகளும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளன.

முன்னதாக, வரும் தேர்தலில் சுமார் 175 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

The SDPI and Mukulathor Pulipadai, which are part of the DMK alliance, have been allocated 1 seat each.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.