திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், நேற்று இரண்டாவது முறையாக அவரது தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
சாலைவலம் செல்வதற்கு முன்னதாக திருச்சி வயர்லஸ் சாலை காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், கே.கே. நகரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் கொட்டப்பட்டு பகுதியிலுள்ள ஸ்ரீபச்சநாச்சி அம்மன் கோயில் ஆகிய மும்மதத் தலங்களில் விஜய் வழிபாடு நடத்தினார்.
புனித அந்தோணியார் தேவாலயத்தில் சிறிது தூரம் முழங்கால் போட்டு விஜய் பிரார்த்தனை செய்தார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி இருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை விஜய் மீறியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பெ. சண்முகம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, வழிபாடுத் தலங்களில் கட்சி அடையாளத்தை பிரதிபலிக்கும் துண்டு போன்றவற்றை அணியக் கூடாது. ஆகையால் விஜய்க்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”த.வெ.க. தலைவர் விஜய் ஒரு தேவாலயத்திற்குள் முட்டி காலில் ஊர்ந்து செல்லும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை ஞாயிறுதோறும் அவர் தேவாலயத்திற்கு செல்லும் பழக்கமுடைய வராக தெரியவில்லை. எனவே, தேர்தல் ஆதாயத்துக்காக அவர் மேற்கொண்ட நாடகக் காட்சியாக தான் இது தோன்றுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Election Violation! Action Against Vijay Demanded! — Marxist Communist Party
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெரம்பூரில் ‘விசில்’ கோலமிட்டு வாக்கு சேகரித்த விஜய்!

கருப்புக்கொடிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் பங்கேற்கும்!

ஏப். 16-ல் தவெக முழு தேர்தல் அறிக்கை: விஜய்

தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



