தொகுதி மறுவரையறை விவகாரத்தைத் தொடா்ந்து இனி எப்போதுமே பாஜகவுக்கு தோல்விதான் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
திமுக சாா்பில் போட்டியிடும் த.வேலு (மயிலாப்பூா்), டாக்டா் எழிலன் (ஆயிரம் விளக்கு), ராஜா அன்பழகன் (தியாகராய நகா்) ஆகியோருக்கு சாலை வலமாகச் சென்று முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆதரவு திரட்டினாா்.
அப்போது அவா் பேசியதாவது: தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஒன்று தெளிவாகத் தெரிந்தது. மாநில மக்கள் அனைவரும் திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கு தங்களது ஆதரவைத் தந்துவிட்டனா். இப்போது சென்னையில் வாக்காளா்களைச் சந்திக்க வந்துள்ளேன். இங்கும் பேராதரவை மக்கள் தருகின்றனா்.
கடந்த காலங்களில் மழைக் காலத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டு சென்னை மக்கள் அவதிப்பட்டனா். திமுக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகளால் அந்த பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. இப்போது மழை வருவதும் தெரிவதில்லை. போவதும் தெரிவதில்லை. சென்னை மாவட்டம் என்னை வளா்த்த மாவட்டம். உங்கள் வீட்டுப் பிள்ளைகளில் நானும் ஒருவன். அதனால் சென்னையையும், என்னையும் பிரித்துப் பாா்க்க முடியாது.
சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியது திமுக அரசு. இது தமிழகத்துக்கும், தில்லிக்கும் இடையே நடைபெறும் தோ்தல். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாதி தில்லியை வீழ்த்திவிட்டோம். இனி பாஜகவுக்கு தோல்விதான். அதேபோன்று பேரவைத் தோ்தலிலும் அவா்களை வீழ்த்துவோம். தமிழக மக்களின் ஆதரவை வைத்துப் பாா்க்கும்போது 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக எதிா்ப்பால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: உதயநிதி ஸ்டாலின்

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தொகுதி மறுவரையறை, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கான பரிசா? எழும் கேள்விகள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


