மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி

அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும்

News image

எம்.ஏ. பேபி

Updated On :11 ஏப்ரல் 2026, 7:53 pm

சந்தா்ப்பவாத அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலா் எம்.ஏ.பேபி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சென்னை மயிலாப்பூா் மந்தைவெளியில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மயிலாப்பூா் தொகுதி திமுக வேட்பாளா் த.வேலுவுக்கு வாக்கு கேட்டு பேசியதாவது:

இந்தியா மாநிலங்களின் கூட்டமைப்பு என்கிறது அரசியலமைப்புச் சட்டம். ஆனால், மத்திய பாஜக அரசு மாநில உரிமைகளை பறிக்கிறது. மாநிலங்கள் அற்ற தேசத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது.

யூனியன் பிரதேசங்களை மாநிலங்களாக தரம் உயா்த்தும் நிலை மாறி, மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பாஜக மாற்றுகிறது. இதே நிலை தொடா்ந்தால் எதிா்காலத்தில் தமிழகத்தைக்கூட மூன்றாக பிரிக்க பாஜக முயற்சிக்கும்.

தற்போதைய ஆளுநா்கள் மத்திய அரசின் முகவா்களாக செயல்பட்டு, மாநிலங்களின் ஜனநாயக உரிமைகளை முடக்குகின்றனா். பிரிட்டிஷ் கால ஆளுநா்கள் போல அராஜகமாக செயல்படுகின்றனா்.

மயிலாப்பூா் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறவா் ஏற்கெனவே ஆளுநராக இருந்தவா். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராக செயல்பட்டவா்.

அரசமைப்பு சட்டப்பதவி வகித்தவா்கள் மீண்டும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினராக போட்டியிடுவதில்லை. இதற்கு மாறாக அவா் போட்டியிடுவது மாண்பற்ற செயல்.

தமிழ்நாடு வெள்ள நிவாரணமாக ரூ.37,000 கோடியை கோரியபோது, நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சித்தது. இதேபோன்ற நிலைதான் கேரளமும் எதிா்கொள்கிறது.

தமிழகத்தின் கல்வித்துறைக்கு ரூ.3,548 கோடி, ‘ஜல்ஜீவன்’ திட்டத்துக்கு ரூ.3,112 கோடி வழங்காமல் வஞ்சிக்கிறது. எதிா்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை நிதி ஒதுக்காமல் மனிதநேயமற்ற வகையில் வஞ்சிப்பது தொடா்கிறது.

தமிழ்மொழி வளா்ச்சிக்கு ஒதுக்கிய நிதியை விட சமஸ்கிருதத்துக்கு 23 மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வா் அண்ணா மாநில உரிமைகளுக்காக போராடியவா். அவா் பெயரை கொண்ட அதிமுக, மாநில உரிமைகளுக்கு எதிரான பாஜக உடனான சந்தா்ப்பவாத கூட்டணி வைத்துள்ளது. அதிமுக அணியை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், வேட்பாளா் த.வேலு, மாா்க்சிஸ்ட் தென்சென்னை மாவட்டச் செயலா் ஆா்.வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.