மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குடும்பத்துக்கு கடன் கொடுத்தவரை பார்த்ததே இல்லை! விஜய்யை விமர்சித்த முத்தரசன்!

தவெக தலைவர் விஜய்யை இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் விமர்சித்தது பற்றி...

News image

முத்தரசன் | விஜய் - DNS

Updated On :3 ஏப்ரல் 2026, 4:58 am

சொந்த குடும்பத்தினருக்கு கடன் கொடுத்தவரை இதுவரை பார்த்ததே இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை, தாய், மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளிட்டவர்களுக்கு கடன் கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், திருவாரூரில் செய்தியாளர்களுடன் முத்தரசன் பேசியதாவது:

”தமிழ்நாட்டில் 4 அணிகள் இருக்கிறது எனக் கூறுகிறார்கள். ஆனால், அதிக அணிகள் இருக்கின்றன. சசிகலா - ராமதாஸ் இணைந்து ஒரு அணியை உருவாக்கியுள்ளார்கள். மற்றொருவர் 100 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்திருக்கிறார். ஆகையால், அணிகள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் ஒருவர் ஏதோ நம்பிக்கையில், திரைப்படத்தில் கிடைத்த ஆதரவு மூலம் அரசியலுக்கு வந்திருக்கிறார். அரசியல் வேறு, சினிமா வேறு என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பிரபலமான நடிகர் சிவாஜி கணேசன் தனியாக கட்சித் தொடங்கி போட்டியிட்டார். முடிவு என்பது அனைவருக்கும் தெரியும்.

அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என அனைவருக்கும் கடன் கொடுத்திருக்கிறேன் என அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். இதுவரை குடும்பத்தினருக்கு கடன் கொடுத்து யாரையும் நான் பார்த்தது கிடையாது. நடிகர்கள், நடிகைகள் வெளியே வந்தால் கூட்டம் கூடுவது வழக்கம்தான். முதல்வருக்கு வரும் கூட்டம் பேச்சைக் கேட்க வருவது. இவரது கூட்டம் பார்க்க வருவது.

வாக்குகளை பிரிப்பது மூலம் மதசார்பற்ற கூட்டணியை தோற்கடித்து விடலாம் என பாஜக விரிக்கும் வஞ்சக வலையில் புதிதாக தொடங்கப்பட்ட அந்த கட்சியும் விழுந்துள்ளது. ஜனநாயகன் படம் வராததற்கு யார் காரணம் என்பது எல்லாருக்கும் தெரியும். தணிக்கை வாரியத்துக்கும் மாநில அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால், மாநில அரசை விமர்சித்து பேசுகிறார். யாருக்கு நாமினியாக அவர் செயல்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்” எனத் தெரிவித்தார்.

Summary

"We have never even seen the person who lent money to the family!" — Mutharasan criticizes Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.