திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவா் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், சென்னை பெரம்பூா் தொகுதியில் கடந்த திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
இந்த நிலையில், திருச்சி பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜய் இன்று வழங்கினார்.
முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் இருந்து பிரசார வாகனத்தில் நின்றபடி, சாலைவலமாக விஜய் வருகைதந்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, பாலக்கரையில் இருந்து மரக்கடை எம்ஜிஆா் சிலை பகுதிக்குச் செல்லும் விஜய், வாகனத்தில் நின்றபடி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
மக்கள் சந்திப்பை தொடங்கிய போது, முதன்முதலில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகேதான் விஜய் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
TVK Leader Vijay Files Nomination in Trichy East!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி தேவாலயத்தில் விஜய் பிரார்த்தனை!

ஏப். 2ல் திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்: பிரசாரத்திற்கு அனுமதி கோரிய தவெக!

பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல்!

பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

