மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் கால் முறிவு!

ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் கால் முறிந்தது பற்றி...

News image

ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் கால் முறிவு - X

Updated On :2 ஏப்ரல் 2026, 9:02 am

திருச்சியில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் கார் ஏறியதில் காவலரின் கால் முறிந்தது.

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தவெக தலைவர் விஜய் வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, திருச்சி மரக்கடை பகுதியில் பிரசார வாகனத்தின் நின்றபடி மக்கள் மத்தியில் உரையாற்றினார். விஜய்யுடன் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், பிரசாரம் நிறைவடைந்து விஜய்யுடன் பிரசார வாகனத்தில் ஆதவ் அர்ஜுனா பயணித்துக் கொண்டிருந்தார். பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவின் காரை அவரது ஓட்டுநர் ஓட்டியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவலர் சதீஷ் என்பவரின் கால் மீது ஆதவ் அர்ஜுனாவின் கார் ஏறியதில் முறிவு ஏற்பட்டது.

வலியால் துடித்த காவலரை சக காவலர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் இணைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Summary

Police Officer Suffers Broken Leg After Being Hit by Adhav Arjuna's Car!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.