மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தவெக தேர்தல் பிரசாரப் பாடல் இன்று மாலை வெளியீடு!

தவெக தேர்தல் பிரசாரப் பாடல் இன்று வெளியாகவுள்ளது பற்றி...

News image

தவெக தேர்தல் பிரசாரப் பாடல் - X / TVK

Updated On :1 ஏப்ரல் 2026, 7:55 am

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரப் பாடல் இன்று மாலை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிரத்யேக பிரசாரப் பாடலை தமிழக வெற்றிக் கழகத்தினர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குரலில் வெளியான ‘உங்க விஜய், நா வரேன்’ பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்திருக்கும் நிலையில், இந்த பாடலும் விஜய் பாடியிருப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடவுள்ளார். கடந்த திங்கள்கிழமை பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், தனது பிரசாரத்தை தொடங்கினார்.

இதனிடையே, திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தவெக தலைவர் விஜய், நாளை காலை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

Summary

TVK Election Campaign Song to be Released This Evening!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.