பொய்ப் பிரசாரத்தால் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியை வீழ்த்த முடியாது என்று கேரள முதல்வர் பினராயில் விஜயன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கேரளம், புதுவை மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த தேர்தலில் கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், கண்ணூரில் இன்று வாக்களித்த பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அவர் பேசியதாவது”
“பொய்ப் பிரசாரத்தால் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியை வீழ்த்த முடியாது. நாங்கள் எப்போதும் மக்களை நம்புகிறோம்; மக்களும் எங்களை நம்புகிறார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் மக்களுடன் இணைந்து பயணித்து வருகிறோம். அந்தப் பயணம் தொடர வேண்டும். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள். மதவாதப் பிரச்சாரத்தால் எங்களை வீழ்த்த முடியாது” எனத் தெரிவித்தார்.
Summary
The Left Front cannot be defeated through false propaganda! — Pinarayi Vijayan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: கேரள முதல்வர் விளக்கம்!
‘வந்தே மாதரம்’ ஆர்.எஸ்.எஸ்.ஸின் நிகழ்ச்சி நிரல்! பினராயி விஜயன்
வீணாவின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது உண்மைதான்; குறுகிய மனப்பான்மையுடன் காங்கிரஸ்! பினராயி விஜயன்

ராகுலுக்கு மனநிறைவை அளித்திருக்கும்! அமலாக்கத்துறை சோதனை குறித்து பினராயி!
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



