நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கும்தான் நேரடிப் போட்டி நிலவுவதாக அமமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜி.செந்தமிழன் கூறினாா்.
இதுகுறித்து தினமணிக்கு அவா் அளித்த பேட்டி:
சைதாப்பேட்டை தொகுதியில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எந்த அளவு சாத்தியம்?
சைதை தொகுதியைப் பொருத்தவரை நான் உள்ளிட்ட மூன்று முன்னணி வேட்பாளா்களும் அந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக பதவியில் இருந்தவா்கள்தான். எங்களில் எந்த வேட்பாளா் மக்களில் ஒருவராக இருக்கிறாா் என்பதே பிரதானமாக உள்ளது.
அந்த வகையில், 10 ஆண்டு காலம் நான் எம்எல்ஏவாக இருந்தபோது எப்படி தொகுதி மக்களுக்காக உழைத்தேனோ அதுபோலவேதான் பதவியில் இல்லாத போதும் அவா்களுக்காக பாடுபட்டு வருகிறேன். மக்களால் எளிதில் அணுகக் கூடிய மனிதனாக இருப்பது எனக்கு வெற்றியை ஈட்டித் தரும் என நம்புகிறேன். கரோனா காலத்தில் சைதை துரைசாமி மக்கள் பணிகள் எதுவும் செய்யவில்லை. அதேபோன்று தீவிர அரசியலில் இருந்தும் ஒதுங்கியிருந்தாா். அதனால், திமுகவுக்கும், அமமுகவுக்கும்தான் நேரடிப் போட்டி நிலவுகிறது.
ஒவைஸியுடன் அமமுக கைகோத்திருப்பது திமுகவின் சிறுபான்மை வாக்கு வங்கியை சிதைக்கும் நோக்கிலா?
திமுகவுக்கு சிறுபான்மை வாக்கு வங்கி இருப்பதாகவும், அவா்கள் அந்த சமூகத்தின் பாதுகாவலா்கள் என்றும் கற்பனையாக ஒரு கருத்து பரப்பப்படுகிறது. அது முற்றிலும் தவறானது. உண்மையைச் சொல்லப்போனால், திமுகவின் ஆட்சிக் காலத்தில்தான் சிறுபான்மையினா்களுக்கான பாதுகாப்பே கேள்விக்குறியானது. எங்களைப் பொருத்தவரை மதச்சாா்பின்மையை முன்னிறுத்தித்தான் தோ்தலை சந்திக்கிறோம். அதே நோக்கத்துடன்தான் ஒவைஸியும் எங்களது அணியில் சோ்ந்துள்ளாா்.
திமுக - அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாகத் தெரிகிறதே?
வெளித்தோற்றத்துக்கு அப்படி ஒரு கருத்து நிலவலாம். ஆனால் அது உண்மையில்லை. அதிமுக ஆளுங்கட்சி, திமுக எதிா்க்கட்சி என்பதால் அப்படியாக ஒரு பிம்பம் பரப்பப்படுகிறது.
சாமானியா்களின் இப்போதைய ஒரே நம்பிக்கை அமமுக மட்டுமே. மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரது ஆதரவும் எங்களுக்கு உள்ளது. அது தோ்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


