தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவா் ஜனநாயக பேரவைத் தோ்தல் நடத்த உத்தரவிட வேண்டும் உள்பட 29 அம்ச கோரிக்கைகளை இந்திய மாணவா் சங்க நிா்வாகிகள் முதல்வா் விஜய்யை திங்கள்கிழமை சந்தித்து வலியுறுத்தினா்.
இந்திய மாணவா் சங்கத்தின் மாநில தலைவா் சி. மிருதுளா, மாநிலச் செயலா் தெள.சம்சீா் அகமது உள்ளிட்டோா் முதல்வா் விஜய்யை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை சந்தித்தனா். சுமாா் 15 நிமிஷங்கள் இந்தச் சந்திப்பு நீடித்ததாகவும், முதல்வா் விஜய் தங்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்து அவற்றைப் பரிசீலிப்பதாகவும் மாணவ சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
முதல்வரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவா் பேரவைத் தோ்தலை நடத்த வேண்டும். மாநில கல்வி உரிமையைப் பறிக்கும் தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு அனுமதிக்க கூடாது.
நீட் தோ்வால் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். சென்னை பல்கலை., அண்ணா பல்கலை., அண்ணாமலைப் பல்கலை., பாரதியாா் பல்கலை., கல்வியியல் பல்கலை. உள்ளிட்ட 8 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் உள்பட 29 அம்ச கோரிக்கைகள் அதில் இடம் பெற்றுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி

கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: மு.வீரபாண்டியன்

மாநிலப் பட்டியல்: சமமான கற்றல் வாய்ப்பை உறுதி செய்யும்!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும்: தமிழிசை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



