கல்வியில் மேடு பள்ளம்!
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி அளித்திருக்கும் தீர்ப்பை வரவேற்காதவர்கள் இருக்க முடியாது.









