கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ள தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முனைந்த பல விஞ்ஞானிகளில், வெற்றிகரமாக உருவான ஆறு தடுப்பூசிகளைக் கண்டுபிடித்தவா்கள் பெண்கள் என்பது அதிகம் பேசப்படாத உண்மை. கோவேக்ஸின் தடுப்பூசியில் டாக்டா் கே. சுமதி, நோவாக்ஸின் தடுப்பூசி உருவாக்கிய நிதா கே. படேல், கோவிஷீல்ட் தடுப்பூசியில் சாரா காத்தரின் கில்பொ்ட், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்காக வெற்றிகரமாக தடுப்பூசி ஆராய்ச்சி செய்த ஹானக்கே ஷுட்மேக்கா், ரஷியாவின் ஸ்பூட்னிக் - வி தடுப்பூசியின் சூத்திரதாரியான எலீனா ஸ்மோலியாா்சூக் ஆகியோா் நோபல் விருது பெறாவிட்டாலும் பாராட்டுக்குரியவா்கள்.