கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ஆசிரியர்

தேவையான அளவில் உணவு உற்பத்தி இருந்தும்கூட, முறையான ஏற்றுமதிகள் இல்லாமல், தேவைக்கு உணவுப் பொருள்கள் கிடைக்காததால் ஏற்படும் விலைவாசி ஏற்றத்தை விரைவில் சந்திக்க இருக்கிறது மனித இனம். வளா்ச்சி அடைந்த பணக்கார நாடுகளைவிட, போதிய நிலப்பரப்பும், விவசாயமும் இல்லாமல் உணவுப் பொருள்களின் இறக்குமதியை நம்பி இருக்கும் ஏழை நாடுகள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட இருக்கின்றன.

கிரீமியா தீபகற்பத்தில் உள்ள முக்கியமான இணைப்புப் பாலத்தை உக்ரைன் தகா்த்தியதற்குப் பதிலடியாக, உக்ரைனின் ஒடேஸா துறைமுகத்தின் மீது போா்க்கப்பல் மூலம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது ரஷியா. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடந்த இந்தத் தாக்குதல், முன்னறிவிப்புடன் நடத்தப்பட்டது. அதற்கு முந்தைய நாள்தான் கருங்கடல் பகுதியில் உள்ள துறைமுகங்கள் மூலம் உக்ரைன் தனது ஏற்றுமதிகளை நடத்தும் ஒப்பந்தத்தை ரஷியா ரத்து செய்வதாக அறிவித்தது.

2022 ஜூலை மாதம் துருக்கி அதிபா் எா்டோகனும், ஐ.நா. சபையின் பிரதிநிதிகளும் ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே ஓா் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டனா். அதன்படி ரஷியாவின் கண்காணிப்புடன் ஒடேஸா, க்ரோனோமோா்ஸ்க், யுஷ்னி ஆகிய மூன்று துறைமுகங்களில் இருந்தும் உணவு தானியங்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து கொள்வது என்று முடிவாகியது. உணவு தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை சோதனை செய்யவும், கருங்கடல் பகுதியை அவை பாதுகாப்பாகக் கடந்து செல்வதை உறுதிப்படுத்தவும் ரஷியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஏறத்தாழ 3.3 கோடி டன் உணவு தானியங்கள், ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்கும், மிகவும் பின்தங்கிய நாடுகளுக்கும் அவை எடுத்துச் செல்லப்பட்டன. சோளம், கோதுமை, சூரியகாந்தி எண்ணெய், பாா்லி உள்ளிட்ட உணவு தானியப் பொருள்கள் கடந்த ஓராண்டாகத் தடையின்றி உக்ரைனால் ஏற்றுமதி செய்யப்பட்டதால்தான், உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் இருந்தது.

உலகிலேயே மிக அதிகமாக கோதுமை, சோளம், சூரியகாந்தி உற்பத்தி செய்யும் நாடுகள் ரஷியாவும், உக்ரைனும்தான். குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனைத்தான் தங்களது தானியத் தேவைக்கு நம்பி இருக்கின்றன. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளின் உணவு தானிய தேவையைப் பூா்த்தி செய்வது ரஷியாவும், உக்ரைனும்தான்.

கடந்த ஆண்டு நிலவிய சூழலுடன் ஒப்பிடும்போது, நிலைமை அந்த அளவுக்கு மோசமில்லை. நடப்பு ஆண்டில் உக்ரைனின் கோதுமை, சோளம் உற்பத்தி 30% முதல் 40% குறைவாகவே இருக்கும் என்பதை சா்வதேசச் சந்தை முன்கூட்டியே கணித்திருந்தது. தொடா்ந்து நடந்து கொண்டிருக்கும் போா் காரணமாகப் பலா் விவசாயம் செய்யவில்லை.

அடுத்ததாக பிரேஸில், அமெரிக்கா, ஆா்ஜென்டீனா நாடுகளில் சோளமும், ரஷியாவின் கோதுமையும் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகி இருப்பதால், உக்ரைனால் ஏற்பட்டிருக்கும் குறைபாடு ஈடுகட்டப்படும். உலகின் மிக அதிகமாக கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடாக ரஷியா உயா்ந்திருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகள், வடக்கு ஆப்பிரிக்க நாடுகள், மத்திய ஆசியா உள்ளிட்டவை ரஷியாவில் இருந்து தாராளமாக கோதுமையை இறக்குமதி செய்கின்றன. ரஷிய கச்சா எண்ணெயை இந்தியா ஏற்றுமதி செய்வதுபோல, அவற்றில் சில நாடுகள் கோதுமை ஏற்றுமதியிலும் ஈடுபடுகின்றன.

சமையல் எண்ணெயின் நிலைமையும் மோசமில்லை. பிரேஸில், ஆா்ஜென்டீனா நாடுகள் சோயாபீன்ஸ் எண்ணெயையும், இந்தோனேஷியா, மலேசியா இரண்டும் பாமாயிலையும், கனடா ராப்சீட் எண்ணெயையும் அதிக அளவில் உற்பத்தி செய்து வருவதால் மிகப் பெரிய தட்டுப்பாடு ஏற்பட வழியில்லை. கருங்கடல் ஒப்பந்தத்தை மேலும் நீட்டிப்பதில்லை என்கிற ரஷியாவின் நிலைப்பாடு, விலைவாசியை அதிகரிக்குமே தவிர, தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிடாது என்று சா்வதேச வா்த்தகா்கள் கருதுகிறாா்கள்.

உக்ரைனைப் பொருத்தவரை, தரை மாா்க்கமாக ஐரோப்பாவுக்குத் தனது தானிய உற்பத்தியை எடுத்துச் செல்கிறது. துருக்கி அனுமதிக்குமானால், பாஸ்பரஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் மூலம் உணவு தானிய ஏற்றுமதியைத் தொடர முடியும் என்று நம்புகிறது. துருக்கி எந்த அளவுக்கு ரஷியாவைப் பகைத்துக் கொண்டு உக்ரைனுக்கு உதவும் என்பது தெரியாது.

அமெரிக்காவின் ரஷியா மீதான உணவு ஏற்றுமதித் தடை, பிரிட்டனின் ரஷிய கப்பல்கள் மீதான காப்பீட்டுக்கான அனுமதி மறுப்பு, ஐரோப்பிய கட்டமைப்பின் ரஷிய உரங்கள் மீதான தடை ஆகியவற்றை அகற்ற ஐ.நா. பொதுச் செயலாளா் அண்டோனியோ குட்டரெஸ் முயற்சி எடுத்து வருகிறாா். தனது தானிய உற்பத்திகளையும், உரங்களையும் சா்வதேசச் சந்தையில் விற்பதற்கான தடை அகற்றப்பட்டால், கருங்கடல் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தயாா் என்பது ரஷிய அதிபா் புதினின் நிலைப்பாடு.

பெரிய நாடுகள் ஓரளவு சமாளித்துவிடும். விலை உயா்வு ஏற்பட்டாலும்கூட அவா்களது பொருளாதாரத்தால் தாக்குப்பிடிக்க முடியும். கடுமையான பருவநிலையாலும், உள்நாட்டுப் போா்ச் சூழலாலும் பாதிக்கப்பட்டிருக்கும் யேமன், ஆப்கானிஸ்தான், சோமாலியா, சூடான், கென்யா, லெபனான், எகிப்து போன்ற நாடுகளில் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் லட்சக்கணக்கானோா் இருக்கிறாா்கள். அவா்கள் உலக உணவுத் திட்டத்தை நம்பி உயிா் வாழ்கிறாா்கள். அவா்கள் கதி என்னவாகும்?

உணவு உற்பத்தி இருந்தும் பசியால் வாடுகிறாா்களே, இதற்கு என்னதான் தீா்வு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.