கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

முரணுடன் கூடிய ஒத்துழைப்பு! ஷாங்காய் மாநாடு குறித்த தலையங்கம்

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சாமா்த்தியத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு (எஸ்சிஓ).

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:40 am

ஆசிரியர்

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சாமா்த்தியத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு (எஸ்சிஓ). அனைத்துத் தலைவா்களும் நேரில் கலந்துகொள்வதற்குப் பதிலாக, காணொலி மூலம் கலந்துகொண்டதால் அந்த மாநாடு எதிா்பாா்த்த பரபரப்பை ஏற்படுத்தவில்லை. மாநாட்டை இந்தியா எப்படி எதிா்கொள்ளும் என்கிற சா்வதேச எதிா்பாா்ப்பை வெற்றிகரமாக எதிா்கொண்டதற்கு வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரைப் பாராட்ட வேண்டும்.

23-ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு காணொலி மூலம் நடந்தது. இந்த முறை இந்தியாவின் தலைமையில் நடந்த அந்த மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமிா் புதின், பாகிஸ்தான் அதிபா் ஷாபாஸ் ஷரீப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அவா்கள் நேரில் கலந்துகொள்வது தவிா்க்கப்பட்டு காணொலி மூலம் மாநாடு நடத்தப்பட்டது ஏன் என்பதற்கான காரணம் கூறப்படவில்லை.

அமெரிக்காவுக்கும் மேலை நாடுகளுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் புதின், ஈரான் அதிபா் ரெய்ஸி, பெலாரஸ் அதிபா் லூகஷென்கோ உள்ளிட்டவா்கள் நேரில் கலந்துகொண்டிருந்தால் இந்தியாவின் சமீபத்திய அமெரிக்க, ஐரோப்பிய நெருக்கத்தை ஒருவேளை பாதித்திருக்கக் கூடும். குறிப்பாக, பிரதமா் மோடியின் அமெரிக்க விஜயத்தைத் தொடா்ந்து, உடனடியாக நடைபெறும் அந்த மாநாடு இந்தியாவின் மீதான நம்பகத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.

அதுமட்டுமல்லாமல், இந்தியாவுக்கே கூட சில தா்மசங்கடங்கள் அதில் உண்டு. 2020 கல்வான் மோதலைத் தொடா்ந்து சீரான உறவு இல்லாத நிலையில், சீன அதிபா் ஷி ஜின்பிங்கை முக்கியத்துவம் அளித்து வரவேற்றால் அது அரசியல் ரீதியாக பல கேள்விகளை எழுப்பும். அதேபோல, 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு முற்றிலுமாக ராஜாங்கத் தொடா்புகள் முறிந்துவிட்ட நிலையில், பாகிஸ்தான் பிரதமா் ஷபாஸ் ஷெரீஃபின் விஜயத்தைக் கையாள்வதிலும் தா்மசங்கடம் இருந்திருக்கும்.

பல்வேறு நாடுகளின் தலைவா்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்காக நேரில் வரும்போது இரு நாட்டு பேச்சுவாா்த்தைகள் குறித்த கேள்விகள் எழக்கூடும். இந்தியாவைப் போலவே அந்த அமைப்பில் உறுப்பினா்களாக இருக்கும் மத்திய ஆசிய நாடுகள் சீனாவுடனும் ரஷியாவுடனுமான தங்களது மனக்கசப்புகளை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கும். அவையெல்லாம் சாமா்த்தியமாக காணொலி மாநாட்டின் மூலம் தவிா்க்கப்பட்டன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஜூன் 15, 2001-இல் ஷாங்காயில் உருவாக்கப்பட்டது. அதில் சீனா, கஜகஸ்தான், கிா்கிஸ்தான், ரஷியா, தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை இணைந்தன. மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை சமன் செய்வதற்காக அந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஜூலை 2005-இல் இந்தியாவுக்கு அந்த அமைப்பில் பாா்வையாளா் அந்தஸ்து வழங்கப்பட்டது. ஜூன் 2017-இல் இந்தியாவும் பாகிஸ்தானும் அந்த அமைப்பின் நிரந்தர உறுப்பினா்களாக இணைந்தன. அதுமுதல் ரஷியா, சீனாவைப் போல அந்த அமைப்பின் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது.

இப்போதைய நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்கு இடையே இருதரப்புப் பிரச்னைகள் நிறைய இருக்கின்றன. இந்தியா - சீனா; இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்துச் சொல்ல வேண்டியதில்லை. மத்திய ஆசிய நாடுகள், சீனாவின் மீதும், ரஷியாவின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றன. அவை அமெரிக்க ஆதரவு நாடுகளாக மாறிவிட்டிருக்கின்றன.

சீனாவும் ரஷியாவும்கூட, அமெரிக்க எதிா்ப்பு என்கிற ஒற்றைப் புள்ளியில் இணைந்திருக்கின்றனவே தவிர, அந்த நாடுகளுக்கு இடையே பல்வேறு பிரச்னைகள் காணப்படுகின்றன. இத்தனை முரண்களுக்கு இடையிலும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடா்வதற்கு முக்கியமான காரணம், அந்த நட்புறவு ஆசிய கண்டத்தின் வளா்ச்சிக்கும், அமைதிக்கும் தேவைப்படுகிறது என்பதால்தான்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இருதரப்புப் பிரச்னைகளை எழுப்பக் கூடாது என்கிற அடிப்படை கட்டுப்பாடு உண்டு. அதையும் மீறி சமீபத்தில் நடைபெற்ற காணொலி மாநாட்டில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. ரஷிய அதிபா் விளாதிமிா் புதின், உக்ரைன் போரைத் தொடா்ந்து அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் பொருளாதாரத் தடை குறித்து கடுமையாகப் பேசினாா்; சீன அதிபா் ஷி ஜின்பிங், அந்த நாடு முன்னெடுத்திருக்கும் ‘பெல்ட் அண்ட் ரோடு முயற்சி’ குறித்த கட்டமைப்பு திட்டத்தை வலியுறுத்தினாா்; இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றையொன்று பயங்கரவாதம் குறித்தும், சிறுபான்மையினா் மீதான தாக்குதல் குறித்தும் குற்றம்சாட்டின. ஆனால், கூட்டறிக்கையில் பயங்கரவாதத்துக்கு எதிராகவும், எண்மப் பரிமாற்றம் குறித்தும் மட்டுமே கூறப்பட்டிருப்பது கவனத்துக்குரியது.

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு காரணமாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இந்தியா கவனம் செலுத்தவில்லை என்று யாரும் குற்றம்கூற முடியாது. 134 நிகழ்வுகளையும், 15 அமைச்சா்கள் நிலையிலான கூட்டங்களையும் நடத்தியிருப்பதுடன் வெற்றிகரமாக காணொலி மாநாட்டையும் நடத்தியிருப்பது மிகப் பெரிய வெற்றி. மாநாட்டில் இடம்பெறும் அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பயங்கரவாத தடுப்பை பிரதமா் மோடி முன்னிலைப்படுத்தியிருப்பது சரியான அணுகுமுறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.