தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் குடித்துவிட்டு கல்விச்சாலைக்கு வருவதும், தகராறுகளில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. ஆகவே, 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை கிடையாது என்பதோடு, மது விற்பனையை உரிய அடையாள அட்டையை (ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை) காட்டுவோருக்கு மட்டுமே என்பதை முறைப்படுத்த வேண்டும். இதனால், மது அருந்தும் இளையோர் கூட்டத்தின் எண்ணிக்கை சற்று குறையும். மேலும், அடையாள அட்டைகளின் எண்கள் பதிவு செய்யப்பட்டு மது விற்கப்படுவதால், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ஒரு தனி நபருக்கான மது அளவைக் குறைத்து (ரேஷன்) வழங்குவதற்கு இயலும்.