நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

துணிவான பேச்சு!

"வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னைகளையும், சவால்களையும் தீர்க்க முற்படாமல், வளர்ச்சி நிரல்கள் பற்றி மட்டுமே முழக்கமிடுதல் கூடாது. 2001-ஆம் ஆண்டின் தோஹா வளர்ச்சி நிரல்கள் இன்றைய நைரோபி மாநாட்டில் காணாமல் போகும் நிலை உண்டாகியிருக்கிறது. இந்த சமநிலைக் குலைவை சரிசெய்யாவிட்டால், உலக வர்த்தக அமைப்பு அமைச்சு உறுப்பினர்களை வரலாறு நியாயமற்றவர்களாக சித்திரிக்கும்' என்று

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:49 am

ஆசிரியர்

வளர்ந்த நாடுகள் வேளாண் பொருள்களுக்கு மிகப் பெருமளவு மானியம் வழங்குவதை முதலில் நிறுத்த வேண்டும்; வளர்ந்துவரும் நாடுகள் மேல் மானியக் குறைப்பைத் திணிக்கக் கூடாது என்று உலக வர்த்தக அமைப்பில் மிகவும் அழுத்தமாக இந்தியா முன்வைத்திருப்பது இதுவே முதல்முறை.
 "வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னைகளையும், சவால்களையும் தீர்க்க முற்படாமல், வளர்ச்சி நிரல்கள் பற்றி மட்டுமே முழக்கமிடுதல் கூடாது. 2001-ஆம் ஆண்டின் தோஹா வளர்ச்சி நிரல்கள் இன்றைய நைரோபி மாநாட்டில் காணாமல் போகும் நிலை உண்டாகியிருக்கிறது. இந்த சமநிலைக் குலைவை சரிசெய்யாவிட்டால், உலக வர்த்தக அமைப்பு அமைச்சு உறுப்பினர்களை வரலாறு நியாயமற்றவர்களாக சித்திரிக்கும்' என்று வளர்ந்த நாடுகளை வெளிப்படையாகவே சாடியிருக்கிறார் மத்திய தொழில், வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
 நைரோபியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக வர்த்தக அமைப்பின் 10-ஆவது அமைச்சு அங்கத்தினர் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாகவே அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்தாலும்கூட, தனது நோக்கத்தின் தீவிரத்தன்மை குறையாமல் அப்படியே பேசியிருக்கிறார். இதற்குக் காரணம், தொடர்ந்து இந்தியா, சீனா இரு நாடுகளும் வேளாண் மானியத்தைக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா பரப்புரை செய்து வருவதுதான்.
 இந்தியா - சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு அவற்றின் உற்பத்தி ஏற்றுமதி அளவுக்கேற்ப, வரிசைப்படுத்தி வேளாண் மானியக் குறைப்பை வலியுறுத்த வேண்டும் என்பதே தற்போது அமெரிக்கா செய்துவரும் பரப்புரையின் அடிப்படை வாதம்.
 தோஹா மாநாட்டின்போது, வேளாண் மானியத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட இரு நாடுகள் சீனாவும், இந்தியாவும். காரணம், இந்தியாவின் வேளாண் விளைபொருள் உற்பத்தி மதிப்பில் 10% தான் மானியமாக அளிக்கப்படுகிறது. அதேபோன்று சீனாவும் தனது வேளாண் விளைபொருள் உற்பத்தி மதிப்பில் 8.5% மட்டுமே மானியமாக அளித்து வருகிறது. இதில் சில விளைபொருள்களுக்கு நேரடியாகவும், பல விளைபொருள்களுக்கு மறைமுகமாகவும் மானியம் அளிக்கப்பட்டு வருகிறது.
 வளர்ந்த, பணக்கார நாடுகள் அனைத்தும் சேர்ந்து 2013-ஆம் ஆண்டில் மட்டுமே 258 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வேளாண் மானியம் வழங்கியுள்ளன. ஆனால், இவர்கள் தொடர்ந்து வளரும் நாடுகள் வேளாண் மானியத்தைக் குறைக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். தோஹா மாநாட்டு தீர்மானத்தை மீறும் வகையில், கடந்த ஆண்டு அறிவித்த வேளாண் மசோதாவில் அளவுக்கு அதிகமான மானியத் திட்டங்களை அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இதற்கு உலக வர்த்தக அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளும் அதிர்ச்சி தெரிவித்துள்ளன.
 இதை பிரேசில் உள்ளிட்ட நாடுகள் வெளிப்படையாகவே கண்டித்துள்ளன. தோஹா மாநாட்டின் தீர்மானத்தை பொருட்படுத்தாமல் இவ்வாறு அமெரிக்கா செயல்படும் என்றால், முதலாவதாக வளரும் நாடுகளை ஏன் கட்டுப்படுத்த முனைப்புக் காட்டுகிறார்கள். இரண்டாவதாக, இந்த மானியம் உள்நாட்டு உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு மட்டுமே, ஏற்றுமதி செய்யப்படும் வேளாண் பொருள்களுக்கு அல்ல என்று சொல்வார்களா என்று சந்தேகமும் எழுப்பியுள்ளனர்.
 ஆனால், அமெரிக்கா இதைப் பற்றிக் கவலைப்படாமல் தனது வாதத்தை தொடர்ந்து முன்னிலைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள 2014 வேளாண் மசோதா குறிப்பிடும் மானியங்கள், "விவசாயிகளுக்கோ அல்லது விளைபொருள்களுக்கோ அல்ல, மாறாக, அவை பெரும்பகுதி காப்பீடுகளாக இருக்கின்றன' என்பதே.
 வேளாண்மை செய்யும் விவசாயி, தான் பயிரிடும் விளைபொருளுக்கு காப்பீடு பெறுவார். விவசாயி எத்தனை ஏக்கரில் பயிரிடுகிறாரோ அதற்கு காப்பீடு நிறுவனங்கள் முழுமையான காப்பீட்டை அளிக்கும். இதற்கான சந்தாவை மிகவும் குறைவாக விவசாயியிடம் பெறும். உண்மையான சந்தா தொகையின் பெரும்பகுதியை அரசு இந்த காப்பீடு நிறுவனங்களுக்கு வழங்கிவிடும். அது மட்டுமல்ல, காப்பீடு பெற்றவருக்கு வங்கிக் கடன் கிடைப்பதும் மிக எளிது.
 அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், விளைநிலப் பரப்பை அதிகரிக்காமல் தொழில்நுட்பத்தால் விளைச்சலை அதிகரிக்கும் போக்கு உள்ளது. இந்தியாவில் விவசாயிகள் பலரும் ஏழைகளாக, மிகச் சிறிய அளவு நிலம் வைத்திருப்போராக இருப்பதால் இங்கே அது சிறிய அளவிலேயே நடைபெற்று வருகிறது.
 இந்நிலையில், இவர்களுக்கு நேரடியாக மானியம் தர இயலாமல் குறைந்த விலையில் உரம் தருவதும், விளைபொருளுக்கு ஆதார விலை நிர்ணயித்துக் கொள்முதல் செய்வதும், பயிர் இழப்பீடுகளை வழங்குவதும், சில பயிர்களை வளர்க்க ஊக்கத் தொகையாக மானியம் அளிப்பதுமாக பலவகையிலும் விவசாயிகளை இந்திய அரசு ஆதரித்து நிற்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் வேளாண்மைக்கு மின்சாரத்தையும் இலவசமாக அளித்து வருகின்றன. இவ்வளவு செய்தும் எண்ணெய் வித்து, பருப்பு உற்பத்தியில் நாம் நிறைவு காண முடியவில்லை
 இந்நிலையில், இந்தியாவில் விவசாயப் பொருள்களுக்கு மானியத்தைக் குறைத்தால் உற்பத்திப் பரப்பு குறையும், விளைச்சல் வரத்து குறையும், உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு ஆளாவோம்.
 வளர்ந்த நாடுகளின் நெருக்கடிகளுக்கு அடிபணியாமல் துணிந்து வளர்ச்சி அடையும் நாடுகளின் சார்பாக இந்தியா குரல் கொடுத்திருக்கிறது. நிர்மலா சீதாராமனுக்கு நன்றி!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.