ஒபாமாவின் ஆசிய விஜயம்!
சில ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்த "இலக்கு ஆசியா' என்கிற வெளியுறவுக் கொள்கையின் தொடர்ச்சியாக, சமீபத்தில் அவர் நான்கு ஆசிய நாடுகளுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் பரவலாகப் பேசப்படாமல் போனது, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கேகூட சற்று ஏமாற்றம் அளித்திருக்கும்.










