தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, புதுவை என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட ஏழு கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி அமைந்திருப்பது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சரித்திர நிகழ்வு. 1962 பொதுத் தேர்தலில் தொடங்கி கடந்த அரை நூற்றாண்டு காலத்தில், ஒரு தேசியக் கட்சியின் தலைமையில் கூட்டணி ஒன்று அமைந்திருப்பது இதுதான் முதல் முறை என்பதால் இந்தக் கூட்டணியின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.
1962 பொதுத் தேர்தலில் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம், அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியுடனும், "பசும்பொன்' முத்துராமலிங்கத் தேவரின் பார்வர்ட் பிளாக் கட்சியுடனும், "காயிதே மில்லத்' முகம்மது இஸ்மாயிலின் தலைமை
யிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீகுடனும் கூட்டணி அமைத்து, அன்றைய ஆளும் கட்சியான காங்கிரûஸ எதிர் கொண்டது. அப்போது தொடங்கி இப்போது வரை, தமிழகத்தில் அமைந்த அத்தனை கூட்டணிகளும் திராவிடக் கட்சிகளின் தலைமையில் தேசியக் கட்சிகளை உள்ளடக்கி அமைந்தனவே தவிர, இதுபோல தேசியக் கட்சியின் தலைமையில் மாநிலக் கட்சிகளின் கூட்டணி அமையவே இல்லை.
இப்படி ஒரு கூட்டணியை அமைக்க காங்கிரஸ் விரும்பாமல் இருந்ததுதான், தேசியக் கட்சிக்கான முக்கியத்துவம் தமிழகத்தில் குறைந்ததன் அடிப்படை காரணம். காங்கிரஸ் கட்சியின் அந்தத் தவறால் தமிழகம் மிகப் பெரிய இழப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தது என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
அண்டை மாநிலங்களான ஆந்திரத்தில் தெலுங்கு தேசமும் காங்கிரஸýம், கர்நாடகத்தில் காங்கிரஸýம் பாஜகவும், கேரளத்தில் காங்
கிரஸ் கூட்டணியும், இடதுசாரிக் கூட்டணியும் என்று மாறிமாறி ஆட்சிக்கு வருவதால், மத்திய ஆட்சியில் அமரும் தேசியக் கட்சிகளைப் பொருத்தவரை, தமிழகத்தைப் புறக்கணித்து அந்த மாநிலங்களின் பிரச்னைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வந்தன. அது காவிரிப் பிரச்னையாக இருந்தாலும், முல்லைப் பெரியாறாக இருந்தாலும் காங்கிரúஸா, கம்யூனிஸ்டோ, பா.ஜ.க.வோ என்று எந்த தேசியக் கட்சியாக இருந்தாலும் தமிழகத்தின் நலனைவிட கர்நாடக, கேரள நலனில்தான் அக்கறை காட்டின. தமிழகத்தின் நலனைப் பாதுகாத்து, அந்த மாநிலங்களில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை இழந்துவிட தேசியக் கட்சிகள் தயாராக இருக்கவில்லை.
தமிழகத்திலும் தேசியக் கட்சி அல்லது தேசியக் கட்சியின் கூட்டணியும் அதற்கு மாற்றாக திராவிடக் கட்சிகளில் ஒன்றும் களத்தில் இருந்திருந்தால், 28 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகத்தையும், 20 உறுப்பினர்களைக் கொண்ட கேரளத்தையும்விட 39 மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தமிழகத்திற்குத்தான் தேசியக் கட்சிகள் முன்னுரிமை அளித்திருக்கும். சற்று யோசித்துப் பார்ப்போம். எதிர்க்கட்சியாக காங்கிரúஸா, பா.ஜ.க.வோ அல்லது அந்தக் கட்சிகளின் தலைமையிலான கூட்டணியோ தமிழகத்தில் இருந்திருந்தால், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்னையில் மத்திய அரசின் அணுகுமுறை எப்படி இருந்திருக்கும்? இலங்கைத் தமிழர் பிரச்னையை இந்திய நடுவண் அரசு எப்படி அணுகியிருக்கும்?
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி மிகவும் வலிமையான கூட்டணி என்றோ, பெருவாரியான மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடும் என்றோ நாம் மட்டுமல்ல, அவர்களேகூட எதிர்பார்க்கமாட்டார்கள் என்று நம்பலாம். ஆனால், இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் சவால் விடும் வலிமையுடன் பலசாலியாகக் களத்தில் பா.ஜ.க. கூட்டணி இருக்கும் என்பது உறுதி. ஒரு சில தொகுதிகளில் மட்டுமே இந்தக் கூட்டணி வெற்றி பெற்றாலும்கூட, இரண்டாவது இடத்தை எட்டிப் பிடித்து, திராவிடக் கட்சிக்கு மாற்றாக தேசியக் கூட்டணி என்கிற புதிய அரசியல் சகாப்தத்திற்கு அடித்தளம் அமைக்கும். அப்படியொரு நிலைமை ஏற்பட்டாலேபோதும். தமிழக அரசியல் புதியதொரு திசையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிடும்.
பா.ஜ.க. தலைமையில் அமைந்திருக்கும் ஏழு கட்சிக் கூட்டணி, வருங்காலத்தில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட வழிகோலக்கூடும். மகாகவி பாரதி கனவுகண்ட நிஜமான தமிழ் தேசிய உணர்வு நனவாக வழிகோலக்கூடும். திராவிடத்திற்கு திராவிடம் மாற்று என்கிற சூழலை மாற்றி, திராவிடத்திற்கு தேசிய மாற்றை ஏற்படுத்தும் மாற்றத்திற்கும் இது வழிகோலக்கூடும். இந்தக் கூட்டணி தேர்தல் களத்தில் மாற்றாக மட்டும் இருந்தால் போதாது. அரசியல் மாற்றத்திற்கான தொடக்கமாகவும் இருக்கும். இருக்க வேண்டும்.
தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் வாய்ப்பு மலர்ந்திருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்

குமரியில் படகு சேவை ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு: நயினாா் நாகேந்திரன்

சிறப்பு அலங்காரத்தில் அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா்...
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

