தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தேர்தல்தான் ஒரே வழி!

முடக்கி வைக்கப்பட்டுள்ள தில்லி சட்டப்பேரவையை மீண்டும் உயிர்ப்பித்து, ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கவலை

Updated On :22 ஜூலை 2014, 12:27 am

முடக்கி வைக்கப்பட்டுள்ள தில்லி சட்டப்பேரவையை மீண்டும் உயிர்ப்பித்து, ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கவலை அளிப்பதாக உள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மறுத்துள்ள போதிலும், இத்தகைய புகார் எழுவதற்கு வாய்ப்பளிப்பதானது அந்தக் கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைச் சீர்குலைத்துவிடும்.

மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு, டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. 31, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஐக்கிய ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம் ஆகியவை தலா ஓர் இடத்தைக் கைப்பற்றின.

அதிகத் தொகுதிகளில் வென்ற தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்த போதிலும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 36 உறுப்பினர்களின் ஆதரவைத் தங்களால் திரட்ட முடியாது என்பதால், புதிய அரசை ஏற்படுத்துவதற்கான உரிமையைக் கோரப் போவதில்லை என்று கூறி, அந்தக் கட்சி போட்டியிலிருந்து கண்ணியத்துடன் விலகிக் கொண்டது. பா.ஜ.க.வின் இந்த நிலைப்பாட்டை அப்போது அனைத்துத் தரப்பினரும் பாராட்டினர்.

இந்த நிலையில், பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் எதிர்த்து முதல் முறையாகத் தேர்தலில் களமிறங்கிய ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. ஆட்சி அமைக்க அக்கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸýம் அறிவித்தது. தேர்தலில் காங்கிரûஸ எதிர்த்துக் கடுமையாக பிரசாரம் செய்ததால், அந்தக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தயங்கினார். பொதுமக்களின் கருத்தறிந்து அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப தில்லியில் கடந்த ஆண்டு, டிசம்பர் 28-ஆம் தேதி கேஜரிவால் ஆட்சி அமைத்தார். 28 உறுப்பினர்களுடைய ஆம் ஆத்மி கட்சியின் சிறுபான்மை அரசுக்கு காங்கிரஸ் வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. ஆம் ஆத்மி கட்சி எந்தக் கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ஆட்சிக்கு வந்த கேஜரிவாலுக்கு, அரசு நிர்வாகத்தைக் கவனிப்பதில் போதிய முன் அனுபவம் இல்லாததால் பல விஷயங்களில் சறுக்கினார். ஆட்சிக்கு வந்த பிறகும் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மத்திய அரசுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினார். மலிவான விளம்பரம் தேடுவதற்காக அவர் இவ்வாறு செயல்பட்டதாக கடும் விமர்சனம் எழுந்தது.

இந்தப் பின்னணியில், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசின் ஒப்புதலைப் பெறாமலேயே சட்டப்பேரவையில் "தில்லி ஜன லோக்பால் மசோதாவை' நிறைவேற்ற கேஜரிவால் அரசு முயன்றது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்காததால், இந்த மசோதாவை ஆம் ஆத்மி அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால், இந்த ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் தேதி கேஜரிவால் தலைமையிலான அரசு ராஜிநாமா செய்தது. இதையடுத்து, தில்லி சட்டப்பேரவையின் செயல்பாடு முடக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றது. மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வைச் சேர்ந்த தில்லி சட்டப்பேரவை உறுப்பினர்களான ஹர்ஷ் வர்தன், ரமேஷ் பிதூரி, பர்வேஷ் வர்மா ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர். இதனால், தில்லி சட்டப்பேரவையில் பா.ஜ.க.வின் பலம் 28 ஆகக் குறைந்தது.

இந்த நிலையில்தான், தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி தில்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக ஆத் ஆத்மி அமைப்பாளர் கேஜரிவால் வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மறுத்துள்ள போதிலும், தில்லியில் எப்படியாவது ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்பதில் அந்தக் கட்சி முனைப்புடன் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது தில்லி சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடத்தப்படுமானால், பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்குக் குறைந்து, காங்கிரஸ் கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகக்கூடும். அது வர இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் புத்துயிர் பெறக் காரணமாக அமைந்துவிடும் என்று பா.ஜ.க. பயப்படுவதாகத் தெரிகிறது.

அரசியல் காரணங்களுக்காக, குதிரைப் பேரத்தின் மூலம் தில்லியில் ஆட்சி அமைப்பது பா.ஜ.க.வுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பெருமை சேர்க்காது. சட்டப்பேரவை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுவதுதான் சரியான முடிவாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.