ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!முதல்வா் நாளை குமரி வருகை!வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

முதுகெலும்பற்றவர்கள்!

ஏறத்தாழ பாதி தொகுதிகளில் 16ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், செத்த பாம்பை அடிப்பதைப் போல, பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்து புத்தகம் எழுதி வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள் சில முன்னாள் அரசு செயலர்கள்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:00 am

ஆசிரியர்

ஏறத்தாழ பாதி தொகுதிகளில் 16ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், செத்த பாம்பை அடிப்பதைப் போல, பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்து புத்தகம் எழுதி வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள் சில முன்னாள் அரசு செயலர்கள். ஊடகங்களும் தங்கள் பங்குக்குக் கட்டுரைகளும் கார்ட்டூன்களும் வெளியிடுகின்றன.

இந்தப் புத்தகங்களும், கட்டுரைகளும், கார்ட்டூன் படங்களும் ஏற்கெனவே மக்களுக்கு நன்றாகவே தெரிந்த, அலுத்துப் போன உண்மைகளை மறுபதிவு செய்கின்றனவே தவிர, புதிதாக எதையும் சொல்லவில்லை. மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் "பினாமி'யாகத்தான் பிரதமர் பதவி வகித்தார் என்பதும், கூட்டணிக் கட்சியினர் இழுத்த இழுப்புக்கெல்லாம் இசைந்து கொடுத்து, அவர்களது ஊழலையும் முறைகேடுகளையும் சகித்துக் கொண்டு, பத்து ஆண்டுகள் பதவி சுகம் அனுபவித்தார் என்பதும் இவர்கள் சொல்லித்தானா தெரிய வேண்டும்? சரித்திரமே சொல்லுமே...

பிரதமர் மன்மோகன் சிங் அரசில் செயலராகவும், அவரது ஊடக ஆலோசகராகவும் பணியாற்றிய இருவர் இப்போது அவரை "செயல்பாடற்ற பிரதமர்' என்று வர்ணித்து புத்தகங்கள் எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. இத்தனை காலம் உடனிருந்த இவர்கள் தங்கள் வாதத்துக்கான சான்றாதாரங்களை தங்கள் புத்தகத்தில் சுட்டிக்காட்டியிருந்தால், ஆட்சி முடிந்த பிறகும்கூட, மன்மோகன் சிங் மீதும் சோனியா காந்தி மீதும் நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருந்திருக்கும்.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் கைப்பாவையாக பிரதமர் மன்மோகன் சிங் செயல்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் எந்தெந்த நாளில், எந்தெந்த கோப்புகள் அவரது பார்வைக்குச் சென்றன, அதற்கான சான்றுகள் என்ன என்பதையெல்லாம் முன்வைக்காமல், பிரதமர் அலுவலக முன்னாள் செயலரும், மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகருமான சஞ்சய பாரு பொத்தாம் பொதுவாக எழுதியிருக்கிறார் என்றால், டீக்கடையில் பொதுஜனம் பேசுவதற்கும், பிரதமரின் பத்திரிகை தொடர்பாளர் புத்தகம் எழுதுவதற்கும் என்ன பெரிய வேறுபாடு?

இதேபோன்று, நிலக்கரி சுரங்க ஊழல் பேசப்பட்டபோது எதையுமே பேசாமல் இருந்த முன்னாள் நிலக்கரி அமைச்சகச் செயலர் பி.சி.பரேக், அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தபோதுதான் பிரதமர் மீது வெளிப்படையாக புகார் கூறினார். என் மீது வழக்கு தொடுக்கப்படும் என்றால் பிரதமர் மீதும் வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். இப்போது அவர் அதை புத்தகமாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார். முழுக்கவும் நிலக்கரி ஊழலை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் ஒரு நீதிமன்ற ஆவணமாக மாறும் தகுதி

யுடையதாக இருக்குமா? வெறும் அரசியல் பரபரப்பாக முடிந்து போகுமா?

பல ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கும். இப்போது இதை ஒரு புகாராக சொல்கிறாரே தவிர, குறிப்பிட்டுச் சொன்னால் அவதூறு வழக்குக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்ற அச்சத்தால் பொதுவாக, ஒரு பத்தியாளர் எழுதுவதைப் போன்று, சில நுட்பமான சொல்லாடலுடன் தனது வாதத்தை நிறுவியிருக்கிறார், அவ்வளவே.

இவர்கள் மட்டுமல்ல, இதுபோன்று பல உயர் அதிகாரிகள் இவ்வாறான புத்தகங்கள் எழுதியுள்ளனர். ஆனால் இவை ஏற்கெனவே தெரிந்தவற்றையே மீண்டும் உறுதிப்படுத்தும் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

"ரா' அமைப்பில் பணியாற்றிய அமித் பரூவா என்பவர் "எஸ்கேப் டு நோவேர்' என்ற புத்தகம் எழுதினார். "ரா' அமைப்பின் இயலாமை காரணமாக, "ரா'வில் பணியாற்றிய ஒரு இரண்டக உளவாளி (டபுள் ஏஜன்ட்), நேபாளம் வழியாக அமெரிக்கா சென்று வேறு பெயரில் வாழும் உண்மைச் சம்பவத்தை ஒரு நாவலாக சித்திரித்திருந்தார். அதில் குறிப்பிடப்படும் அந்த இரண்டக உளவாளி யார் என்பது "ரா' அமைப்பில் பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இது வெறும் நாவல் என்று சொல்லி, தவிர்த்துவிட முடியும்.

1962இல் சீனாவுடனான போருக்கு காரணம் நேருவின் தவறான புரிதல்தான் என்று இப்போது எழுதுகிறார்கள். பத்தியாளர்கள் பலருடைய கட்டுரைகளும் பல விதமாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இவர்கள் ஏன் அந்த நாளில், நேரு உயிருடன் இருந்த காலத்

திலேயே இதை இந்த அளவுக்கு பெரிதாக முன்வைக்கவில்லை?

இதுபோன்ற, முன்னாள் அதிகாரிகளின் புத்தகங்கள் பலவும், பேச வேண்டிய நேரத்தில் மௌனமாகவும், எல்லாம் முடிந்தபிறகு சலசலப்பை ஏற்படுத்தவும் காரணம் - பொது நலத்தைக் காட்டிலும் புத்தக விற்பனை என்கின்ற அவர்களது சுயநலம்தான்.

"செயல்படாத பிரதமர்' என்று உலகமே எள்ளி நகையாடும் மன்மோகன் சிங் பற்றி, இப்போது புத்தகம் எழுதும் இவர்களும்கூட அவரைப் போலவே முதுகெலும்பற்றவர்கள்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.