அன்னையர், தந்தையர் தினம் போன்று அக்டோபர் மாதம் 4 ஆவது ஞாயிற்றுக்கிழமை மாமியார் தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, ஈரோடு வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 'மாமியாரை 'அம்மா' என்று அழைக்கலாமா?' என்பது குறித்து தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
சா.மோகனாதேவி: மாமியாரை தாய்க்கு இணையானவராக ஏற்றுக்கொள்ளலாம். தாய் வீட்டுக்கு இணையாக மாமியார் வீட்டையும் அங்குள்ள அனைத்து உறவுகளையும் நேசிக்க வேண்டும்.
பூவரசி: மாமியாரை அம்மா என்று அழைக்கலாம். தாய் வீட்டு உறவுகளை பிரிந்து மாமியார் வீட்டுக்குச் செல்லும் பெண், தன் தாய்க்கு இணையாக மாமியார் இருப்பார் என நினைக்கிறார். அந்த எண்ணத்தை பூர்த்தி செய்யும் மாமியார் கிடைத்துவிட்டால் தாயாக அழைப்பதில் தவறு இல்லை.
பிரியா: மாமியார் காட்டும் பாசம், அரவணைப்பு தான் அவரை அம்மா என்று அழைக்கலாமா என்பதை முடிவு செய்ய முடியும்.
திவ்யபாரதி: மாமியாரை அம்மாவுக்கு இணையாக நினைத்து அவரிடம் அன்பு செலுத்துவதன் மூலம் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மாமியார் கண்டித்தாலும் அம்மா கண்டிப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டும்.
ந.பவ்யா: பிறந்த வீட்டில் இருந்த காலத்தைக் காட்டிலும் புகுந்த வீட்டில்தான் அதிக காலம் இருக்கப்போகிறோம் என்பதை நினைவில் கொண்டு, மாமியார் என்று அழைக்கலாம்.
நவீனா: மாமியாரை இன்னொரு அம்மா என்றுதான் நினைக்க வேண்டும். பெற்றோரைப்போல் மாமியாரை பார்த்துக்கொள்ள வேண்டும்.
அஸ்மா ரிஸ்வானா: புகுந்த வீட்டில் பிரச்னைகளை தவிர்க்க அம்மாவுக்கு இணையாக மாமியார் மீது அன்பும், மரியாதையும் செலுத்த வேண்டும்.
ஆர்.ஹரிணி: பிறந்த வீட்டில் தாயைப் பிரிந்து செல்லும் நிலையில் மாமியாரை தாயாக நினைத்து அன்பு செலுத்தி அவரை வாழ்க்கை முழுவதும் உடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
சௌமியா: மாமியாரை தோழியாக நினைத்துப் பழக வேண்டும். அவருடைய உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஜெயஸ்ரீ: சோம்பறித்தனத்தினாலேயே மாமியார் வீட்டில் பிரச்னை வருகிறது. இதனால் புகுந்த வீட்டில் வேலைகளை மாமியாருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதனை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் மாமியார்- மருமகள் உறவு தாய் -மகள் உறவாக இருக்கும்.
பிரீத்தி: அம்மாவுக்கு இணையான புனிதமான உறவுதான் மாமியார். எனினும்மாமியாரை அம்மா என்று அழைக்க வேண்டியதில்லை. அவரை அத்தை என்றே அழைக்கலாம்.
சம்யுக்தா: மாமியாரை அம்மா என்று அழைப்பதன் மூலம் இருவருக்குமிடையோன உறவு வலுப்படுகிறது. அரவணைத்துச்செல்லும் மாமியார் கிடைப்பது வரம். அவரை அம்மா என்று அழைக்கலாம்.
கோகிலா: மாமியார் நல்ல விதமாக நடந்துகொண்டால் அவரை தாயாக நினைக்கலாம்.
கிருஷ்ணஹரினி: பெற்றோர் வீட்டில் கிடைத்த அரணைப்பு புகுந்த வீட்டில் மாமியாரிடம் கிடைத்தால் அவரை தாயாக நினைக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


