மேரி ஆன்னிங் சாதாரண பெண். ஏராளமான கண்டுபிடிப்புகளைத் தந்துள்ள அவரின் வரலாறும், செயல்பாடும் மிகவும் ஆச்சரியப்படத்தக்கது. மேரி ஆன்னிங் அமெச்சூர் புதைபடிமப் பொருள்/தொல்பொருள் சேகரிப்பாளர். 1799, மே 21 ஆம் நாள் பிறந்து 19 ஆம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க உலகின் மிகச் சிறந்த புதைபடிம சேகரிப்பாளர். ஆனால் அதுகுறித்தான அங்கீகாரம் இவருக்கு வழங்கப்படவில்லை என்பதே உண்மை.
அவர் அப்போதைய சமூகத்தின் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்பதால், அவரது தனிப்பட்ட குணங்கள், அவரது தொடர் அனுபவங்கள் போன்றவையே அவருக்கு அங்கீகாரம் கிடைக்க உதவி செய்தன. ஆனால், அப்போதைய காலகட்டத்தில் உயர் வகுப்பில் இருந்த ஆண்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இப்படிப்பட்ட நிலவியல் தொடர்பான புதை படிம கண்டுப்பிடிப்புகளுக்கு ஏராளமான பெருமையும், பொருட்களும் குவிந்தன.
மேரியின் எலும்பு மீன்
மேரி ஆன்னிங் கடலில் வாழ்ந்த டைனோசாரான மீன் போன்ற அமைப்புடைய இக்தியோசாராஸ்(Icthyosaurus-"fish-lizard") என்ற டைனோசாரின் எலும்பை அவர் 11 வயதாக இருக்கும்போது முதன்முதல் முழுமையாக கண்டுபிடித்தவர். பத்து மீட்டர் (30 அடி) நீளமுள்ள எலும்புக்கூடு ஒரு பரபரப்பை உருவாக்கி அவளை பிரபலமாக்கியது. அதனால் அந்த எலும்பை, "மேரியின் எலும்பு மீன்" என்றே அழைத்தனர். மேரியின் கண்டுபிடிப்புகள் பிரிட்டனின் தொல்லியல் துறைக்கு மிகவும் ஆதாரமாய் விளங்கின. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அவரை பெரிதாக அரசும் அறிவியலாளர்களும் மதிக்கவில்லை. ஆனால் அவரின் கண்டுபிடிப்புகள் மற்றும் தகவல்களைப் பயன்படுத்திக்கொண்டனர்.
மேரியின் கண்டுபிடிப்புகள்
தென்மேற்கு இங்கிலாந்தில் டோர்செட் வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கை மற்றும் பூமியின் வரலாறு பற்றிய அறிவியல் சிந்தனையின் மாற்றங்களுக்கு மேரி ஆன்னிங்கின் கண்டுபிடிப்புகள் பங்களித்தன. ஆன்னிங் அப்பகுதியின் ப்ளூ லியாஸ் மற்றும் சார்மவுத் மட்ஸ்டோன் பாறைகளில் புதைபடிவங்களைத் தேடினார். குறிப்பாக குளிர்கால மாதங்களில் நிலச்சரிவுகள் புதிய புதைபடிவங்களை கடலுக்குள் இழப்பதற்கு முன்பு, மேரி சென்று விரைவாக சேகரிக்க வேண்டியிருந்தது. அவரது கண்டுபிடிப்புகளில் சரியாக அடையாளம் காணப்பட்ட கடலில் வாழ்ந்த மீன் போன்ற அமைப்புடைய டைனோசாரின் எலும்புக்கூடு முக்கியமானது.
முதல் இரண்டு கிட்டத்தட்ட முழுமையான பிளேசியோசர் எலும்புக்கூடுகள்; ஜெர்மனிக்கு வெளியே அமைந்துள்ள முதல் ஸ்டெரோசர் எலும்புக்கூடு மற்றும் மீன் புதைபடிவங்கள். அந்த நேரத்தில் பெசோவர் கற்கள் என அழைக்கப்படும் கோப்ரோலைட்டுகள், புதைபடிவ மலம் என்று கண்டுபிடிப்பதில் அவரது அவதானிப்புகள் முக்கிய பங்கு வகித்தன. மேலும், பெலெம்னைட் புதைபடிவங்களில் நவீன செபலோபாட்களைப் போன்ற புதைபடிவ மை சாக்குகள் இருப்பதையும் கண்டுபிடித்தார். ஒரு கருத்து வேறுபாடு மற்றும் ஒரு பெண்ணாக 19 ஆம் நூற்றாண்டின் பிரிட்டனின் விஞ்ஞான சமூகத்தில் ஆன்னிங் முழுமையாக பங்கேற்க முடியவில்லை.
பெண் என்பதால் அங்கீகாரமின்மை
மேரி ஆன்னிங் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியில் நிதி ரீதியாக போராடினார். ஒரு பெண்ணாக இருந்ததினால், அவருக்கு லண்டனின் புவியியல் சங்கத்தில் சேர அவர் தகுதி பெறவில்லை. மேலும் அவரது அறிவியல் பங்களிப்புகளுக்கு எப்போதும் முழுமையான அங்கீகாரம் /மரியாதையை கிடைக்கவில்லை. எவ்வாறாயினும் அவரது நண்பர், புவியியலாளர் ஹென்றி டி லா பெச்சே புதைபடிவ புனரமைப்புகளிலிருந்து பெறப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையின் ஒரு காட்சியின் பரவலாக பரப்பப்பட்ட சித்திர பிரதிநிதித்துவமான துரியா பழங்காலத்தை வரைந்தார்.
இது பெரும்பாலும் ஆன்னிங் கண்டுபிடித்த புதைபடிவங்களை அடிப்படையாகக் கொண்டது. அவர் அவற்றை தனது வாழ்வாதாரத்துக்காக அச்சிட்டு விற்றார். ஆன்னிங் பிரிட்டன், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள புவியியல் வட்டாரங்களில் நன்கு அறியப்பட்டார். மேலும் உடற்கூறியல் பிரச்சினைகள் மற்றும் புதைபடிவங்களை சேகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டார். ஆனால், அவரது வாழ்நாளில் வெளியிடப்பட்ட ஒரே ஒரு அறிவியல் எழுதல் என்பது 1839 இல் இயற்கை வரலாற்று இதழில் வெளிவந்தது. ஆன்னிங் பத்திரிகையின் ஆசிரியருக்கு அவரின் உரிமைகோரல்களில் ஒன்றைக் கேள்விக்குட்படுத்திய ஒரு கடிதத்தின் அம்சம் அது.
மரணத்திற்குப் பின்னர் மரியாதை
1847 இல் மேரியின் மரணத்திற்குப் பிறகு அவரது அசாதாரண வாழ்க்கைக் கதை, உலகின் கண்களுக்கு அதிக ஆர்வத்தை அதிகரித்தது. ஹென்றி ஸ்டூவர்ட் ஃபேகன், மேரி ஆன்னிங்கின் வாழ்க்கையைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதினார். இது பிப்ரவரி 1865 இல் சார்லஸ் டிக்கென்ஸின் இலக்கிய இதழான "ஆல் தி இயர் ரவுண்டில்" வெளியிடப்பட்டது. அதன் பெயர் "புதைபடிவ கண்டுபிடிப்பாளர் மேரி ஆன்னிங்".
மேரி ஆன்னிங் உடன் அவரது காலத்தில் தொடர்பில் இருந்தவர் சார்லஸ் டிக்கென்ஸ். ஆனால் 2014 ஆம் ஆண்டில் பழங்காலவியல் வரலாற்றாசிரியர்களான மைக்கேல் ஏ. டெய்லர் மற்றும் ஹக் எஸ், 'அவையாவும் அசல் அல்லது நம்பகமானதல்ல; ஆன்னிங் எழுத்தில் பிழைகள் உள்ளன; அவை இன்னும் சிக்கலானவை' என்று கூறினார்கள்.
ஆனால் 2010 ஆம் ஆண்டில், ராயல் சொசைட்டி உலக விஞ்ஞான வரலாற்றில் மிகவும் செல்வாக்கு செலுத்திய பத்து பிரிட்டிஷ் பெண்களின் பட்டியலில் மேரி ஆன்னிங்கை உள்ளடக்கியே வெளியிட்டது. ஆன்னிங்கின் கதையில் அவரது நாக்கு-ட்விஸ்டருக்கு உத்வேகம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
மேரியின் பிறப்பும் குழந்தைப் பருவமும்
மேரி ஆன்னிங் 1799ம் ஆண்டு மே மாதம் 21ம் நாள், இங்கிலாந்தின், டோர்செட் (Dorset) என்ற இடத்தில் லைம் ரெஜிஸ் என்ற ஊரில் பிறந்தார். தந்தையின் பெயர்: ரிச்சர்ட். அன்னையின் பெயர்: மேரி மோர் ஆன்னிங். தந்தை, இறப்பவர்களுக்கு சவப் பெட்டி செய்யும் தொழிலைச் செய்துவந்தார். மேரியுடன் பிறந்தவர்கள் 10 பேர். ஆனால் மேரியும், அவரது பெரிய அண்ணன் ஜோசப்புமே பெரியவர்களாகி வாழ்ந்தவர்கள். மேரி பிறந்த ஓராண்டில் அவர் உயிர் பிழைத்தது என்பது அரிதான் நிகழ்வு. 1800 ஆகஸ்ட் 19 அன்று லைம் ரெஜிசில் இடியும் மின்னலுமாய் மழை கொட்டியது. அப்போது அங்கே ஒரு மரத்தின் கீழ், மேரியையும் சுமந்து கொண்டு, 4 பேர் மரத்தின் கீழ் நின்றனர். பளீரென வீசியடித்த மின்னல், மரத்தைத் தாக்கி, அவர்கள் நால்வரையும் தாக்கியது. அடுத்த வீட்டுப்பெண்ணின் கையில் இருந்த 15 மாத பெண் குழந்தை மேரி ஆன்னிங் சிறு காயமும் இன்றி உயிர் தப்பிப் பிழைத்தது அதிசயமே.
வறுமையும் பிழைப்பும்
மேரி ஆன்னிங் தன் இளமைக்காலத்தில் வறுமையால் கஷ்டப்பட்டார். அவர் ஞாயிறுதோறும் நடக்கும் பள்ளியில் சேர்ந்தே படித்தார். முறையான படிப்பு படிக்கவில்லை. ஆன்னிங்கின் தந்தை ரிச்சர்ட் தன மகள் ஆன்னிங், மகனுடன் ஜோசப்புடன் புதைபடிம பொருட்கள் பொறுக்கச் செல்வார். அப்போது ஜோசப் 1811ல் இக்தியோசாரின் மண்டையோட்டை, கடற்கரையில் 4 அடி ஆழம் தோண்டி கண்டுபிடித்தார். அப்போது ஆன்னிங்க்கு வயது 12. அதனை, ஹென்றி ஹோச்டே ஹென்லி என்ற பிரபு என்பவர் 25 ஷில்லிங்-க்கு வாங்கிக் கொண்டார். அதன்பின்னர் ஆன்னிங் தனியாக 1821ல் இக்தியோசாராஸ் (Ichthosaursus) எலும்பைக் கண்டுபிடித்தார்.
ஆன்னிங்கைத் தேடி வந்த விஞ்ஞானிகள்
மேரி ஆன்னிங் ஒரு பயிற்றுவிக்கப்பட்ட அல்லது ஆய்வகத்தில் பணிபுரிந்து கண்டுபிடித்த விஞ்ஞானியல்ல. இருப்பினும் அவரது கண்டுபிப்பு உயிரியல் உலகுக்கு பெரிய வரப்பிரசாதமாய் அமைந்தது. மேரி ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். வாட்டர்லூ போர் நடக்கும் நடக்கும் காலத்தில் அவருக்கு வயது 16. இங்கிலாந்தில் விக்டோரியா ராணி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். ஆனால் அவரைத் தேடி அவர் கண்டுபிடித்த புதைபடிமப் பொருட்களைப் பார்ப்பதற்காக ஏராளமான விஞ்கானிகள் அவரது இல்லம் நோக்கி வந்தனர். அவர் தன் வீட்டை விட்டு ஒரே ஒரு முறைதான் வெளியே சென்றிருக்கிறார்.
தந்தை இறப்பு; பிழைப்புக்காக புதைபடிமம் தேடல்
ஆன்னிங் தன் தந்தையிடமிருந்து கடலோரத்தில் புதைபடிம பொருட்களை கடலோரத்தில் இருந்து பொறுக்கி சுற்றுலா பயணிகளிடம் விற்பதைக் கற்றுக்கொண்டார். அப்போது ஐரோப்பாவின் பிரெஞ்சு புரட்சியும், நெப்போலியன் சண்டையும் நடந்து கொண்டிருந்த நேரம். இதனால் ஏராளமான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
1792-1812 காலகட்டத்தில் கோதுமையின் விலை அதிகமானது. ஆனால் தொழிலாளிகளின் சம்பளம் உயரவில்லை. அப்போது டோர்செட் நகரில், இது தொடர்பாக அரசியல் அமைதி குலைந்தது. கலகம் பிறந்தது. மேரியின் தந்தையும் உணவுப் பற்றாக்குறை போராட்டத்தில் இணைந்தார். இவர்கள் கிறித்துவ மதத்தைப் பின்பற்றாத நிலையில் இவர்களுக்கு அரசு வேலையும் மறுக்கப்பட்டது. இந்த மோசமான நிலையில் ரிச்சர்ட் காசநோயின் தாக்குதலுக்கு ஆட்பட்டார். மேலும், பாறைச் சரிவிலிருந்தும் கீழே விழுந்து காயமும் பட்டார்.
இத்துனை வேதனைகளுடன் 1820ல் ரிச்சர்ட், ஆன்னிங்கின் 11வது வயதில் இறந்தார். அப்போது அவரின் வயது 22 தான். ஆனால் அவர் வீட்டுக்கு விட்டுச் சென்ற சொத்து 120 ஷில்லிங் கடன் மட்டுமே. அதன் பின்னரும், மேரி ஆன்னிங் அவரின் பருவ வயதில் குடும்பத்தின் உணவுக்கான ஆதாரமாய் இருந்தார். அப்போதும் கூட புதைபடிம பொருட்கள் பொறுக்கி சேகரித்து விற்றே குடும்பத்தைக் காப்பாற்றினார். புதைபடிம சேகரிப்பு என்பது உயிரை பணயம் வைத்து செய்யும் தொழில். பிரிட்டனின் அதிகமான புதைபடிம பொருட்கள் இருந்த இடம் லைம் ஜிமிம். அங்கே கடலூரத்தில் செல்லும்போது, செங்குத்தான பாறைகள் சரியலாம். பாறைச் சரிவும் ஏற்படலாம். அங்கிருந்த சுண்ணாம்பு பாறைகள் மற்றும் சேல்ஸ்களில் புதைபடிம பொருட்கள் பதிந்து கிடந்தன. இவைகளின் வயது 210 மில்லியன் ஆண்டுகள். அவை ஜூராசிக் காலத்தவை. அப்போதுதான் டைனோசார்கள் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து ஆண்டு கொண்டிருந்தன.
புதைபடிமங்களின் கண்டுபிடிப்பும், விற்பனையும்
ஆன்னிங் கடற்கரையில் உள்ள, சரிவான செங்குத்தான பாறைகளின் வழியே நடந்து புதைபடிம பொருட்களான புதைப்படிமங்களை சேகரிப்பார். அவர் அவைகளை நிறுவனங்களுக்கும், தனி சேகரிப்பாளர்களுக்கும் விற்றுவிடுவார். அவரின் மிகச் சிறந்த கண்டுப்பிடிப்பு, மீன் போன்ற டைனோசாரான இக்தியோசாராஸ் Ichthyosaurus (1821) என்பதைக் கண்டுபிடித்ததும், பறக்கும் டைனோசாரான பிளியோசாரசும் (Plesiosaurus)தான். இவை (1823) பூமியிலிருந்து தோண்டி எடுத்ததும்தான் அவற்றின் ஒரு எலும்புத் துணுக்குகூட சிதையாமல், அப்படியே முழுமையாக கண்டுபிடித்ததுதான் சாதனை. மேலும் அவர் சுறா மீன் மற்றும் மற்றும் திருக்கை போன்ற மீன்களின் இணைப்புக் கண்ணியைக்( Squaloraja fossil fish) கண்டுபிடித்தார்.
ஆன்னிங் நிலைமை
ஆன்னிங் இக்தியோசாராஸ்( Ichthyosaurus) கண்டுபிடித்ததற்காக லண்டனிலுள்ள புவியியல் /நிலவியல் கழகம்,( Geological Society) பெருமைப்படுத்தினாலும் கூட, அவரை நிலவியல் கழகத்தின் உறுப்பினாரகக்கூட அனுமதிக்கவில்லை. சேர்த்துக்கொள்ளவில்லை.
காரணம், அவர் ஒரு பெண் மற்றும் தாழ்ந்த தாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர். ஆன்னிங் பணிசெய்யும் சாதாரணப் பெண் என்பதால், அவரை அறிவியல் சமூகம் அவர்களுடன் இணைக்கவில்லை; மனமும் இல்லை. அப்போது பிரிட்டனில் பெண்களுக்கு வாக்குரிமையும் கிடையாது. பொது அலுவலகத்தில் பணிபுரிய அனுமதி இல்லை. அதுமட்டுமா? பல்கலைக்கழகத்திற்குச் செல்லவும் அனுமதி கிடையாது.
எப்படிப்பட்ட மோசமான சூழல். ஆனால் ஆன்னிங் ஒரு புதைபடிம பொருளை /பாசிலைப் பார்த்த மாத்திரத்திலேயே அதன் தன்மையை ஆதியோடு அந்தமாக விளக்கமாக தெரிவித்துவிடுவார். இந்த அறிவில் யாரும் கிட்ட நெருங்க முடியாது. ஆனால் அன்றைய அறிவியல் சமூகம், ஆன்னிங்கிடமிருந்து பாசிலை வாங்கிக் கொண்டு, அவரிடமே அதைப்பற்றிய அறிவியல் விவரணைகளையும் பெற்றுக் கொண்டு, அவற்றை அறிவியல் இதழ்களில் வெளியிட்டு விடுவார்கள். அதில் மேரி ஆன்னிங் பெயர் இருக்குமா என்றால் இருக்காது. இந்த தகவல்கள் முழுமையும் மேரிக்கு தெரியும். மனவேதனை நெஞ்சுக்குள் கசப்பான உணர்வுதான் அவருக்கு. என்ன செய்ய? விற்பதற்கும் காசுக்கும் இந்த நன்றியற்ற அறிஞர்களைத் தான் நம்பி இருக்க வேண்டியிருக்கிறது.
அன்னாபின்னியின் பதிவு
பின்னர் இதைப் பற்றி அவருடன் வந்த அன்னா பின்னி என்ற இளம்பெண், அவருடனேயே புதைப்படிமங்களை சேகரித்தவர். அவரைப் பற்றி அவரின் வார்த்தைகளில் எழுதியுள்ளார்.
"இந்த உலகம் என்னைப் பயன்படுத்திக்கொண்டது. இந்த ஆண் அறிஞர்கள் புத்தகங்களில் எழுதியுள்ளவை அனைத்தும் என் மூளையிலிருந்து உறிஞ்சப் பட்டவை." என்று எழுதியுள்ளார்.
19 ம் நூற்றாண்டில், புதைபடிம பொருட்கள் கல்லுடைக்கும் தொழிலாளிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், சாலைத் தொழிலாளர்கள் மூலமே அறியப்பட்டன. அப்போது அவற்றின் அறிவியல் முக்கியத்துவம் குறைவு.
நிலவியல் கழகம்
ஆன்னிங் 1828ல் முதன்முதலில் முதுகெலும்பில்லாத விலங்கினங்களின் புதைபடிம பொருட்களையும் கண்டுபிடித்தார். அதன் பெயர் பெலெமனோசுபியா (Belemnosepia) அந்த ஆண்டே பறக்கும் டினோசாரின் புதைபடிமத்தை(Pterodactylus macronyx-"wing finger") ஆன்னிங் கண்டுபிடித்தார்.
இவரது 'அம்மோனைட்ஸ்' படிமம், மக்களால் பாம்புக் கல் (snakes stone) என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1834ல் அந்த ஊருக்கு வந்த பெரிய புதைபடிம சேகரிப்பாளர் லூயிஸ் அகஸ்சிஸ் ( Louis Agassiz) ஆன்னிங் பற்றி பெருமையாக அவரது புத்தகமான Studies of Fossil Fish- இல் ஏராளமாக எழுதியுள்ளார்.
அறிவியல் உலகம் அவரை அங்கீகரித்தாலும், ஆன்னிங்கை நிலவியல் கழகத்தின் உறுப்பினராக சேர்க்கவில்லை. பின்னர் 1904ல் தான் இவர் இணைக்கப்பட்டார். நிலவியல் கழகம் அவரின் இறப்பை அவரின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டு 1847ல் பதிவும் செய்தது.
மேரி ஆன்னிங் பெருமைகள்
லைம் ரெஜிசில் உள்ள புனிதமைக்கேல் தேவாலயத்தில் மேரி ஆன்னிங்கின் நினைவாக ஒரு வண்ண கண்ணாடி சன்னல் உருவாக்கப்பட்டது.
மேரிக்கு சக புதைபடிம சேகரிப்பாளரான அதே ஊரைச் சேர்ந்த எலிசபத் பில்போட்(Elizabeth Philpot) உடன் நல்ல உறவு இருந்தது.
முழு இக்தியோசாராஸ் எலும்பைக் கண்டுபிடித்த முதல் அறிஞர் மேரி ஆன்னிங்.
இன்றும்கூட ஆன்னிங் கண்டுபிடித்த இந்த மீன் டைனோசார் புதைபடிமம், லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ளது.
பொதுவாக மேரி, கடற்கரைக்கு புயல் அடித்து ஓய்ந்த காலங்களில்தான் புதைபடிமம் பொறுக்கச் செல்வார். ஏனெனில் அப்போதுதான், பாறைகள் சரிந்து, புதைபடிமங்கள் கீழே கிடக்கும். எளிதில் எடுக்கலாம்.
மேரி ஆன்னிங் இறப்புக்குப் பின் 163 ஆண்டுகள் சென்றபின் அவரின் பெயர் லண்டனின் ராயல் சொசைட்டியில் பிரிட்டிஷ் பெண்கள் பட்டியலில் இணைக்கப்பட்டது. யார் அதிகமான அளவில் அறிவியலை தாக்கத்துக்கு உள்ளாக்கினார்கள் என்ற அடிப்படையில் இணைக்கப்பட்டது.
ஆனால், சார்லஸ் டார்வினின் ஆசிரியரும், மேரி ஆன்னிங்கின் துவக்க கால வாடிக்கையாளரும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நிலவியல் பாடத்தை போதித்துக்கொண்டிருந்த ஆடம் செட்ஜ்விக் என்ற மிககப்பெரிய பேராசிரியர் மற்றும் சார்லஸ் லைல் போன்றோர் ஆன்னிங்கிடம் லைம் ரெஜிஸ் கடற்கரையில் புயல் சமயத்தில் /சாதாரண நிலையில் கடல் அலைகள், எப்படி கடற்கரை பாறையின் சரிவுகளை எப்படி தாக்கி அரிக்கின்றன என்றெல்லாம் கேட்டும், புதைபடிமம் பற்றிய விளக்கம் கேட்டும் ஆன்னிங்க்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இதன் மூலமாக ஆன்னிங்கின் திறமை, அவற்றைப் பற்றிய அமைப்பு, உடற்கூறியல் மற்றும் அனுபவ அறிவு எவ்வளவு இருக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள். ஆன்னிங் புதைபடிமம் பற்றிய அசாத்தியமான அறிவு இருந்தது என்பதை அப்போதுள்ள அனைவரும் அங்கீகரித்து அதுதொடர்பாக 1824ல் ஆன்னிங்கைக் காண வந்த ஹாரியட் சிவேஸ்டர் (Lady Harriet Sivester) என்ற பெண் அவரது குறிப்பேட்டில் பதிவுசெய்து வைத்துள்ளார்.
பின்னர் 1838ல் அவரது புதைபடிம கடையின் வருமானம் என்பது பிரிட்டிஷ் சங்கத்தின் அறிவியல் முன்னேற்றத்திற்காக ஆன்னிங்க்க்கு கொடுத்த 25 ஷில்லிங்கால் காப்பற்றப்பட்டது. பின்னர் ஆன்னிங்கின் இறுதி கால வாழ்க்கையின்போது , 1846ல் நிலவியல் கழகம் அவருக்கு மரியாதை நிமித்தமாக உறுப்பினர் தகுதியை வழங்கியது. இதே அதன்பின் மேரி ஆன்னிங்கை மார்பகப் புற்று நோய் ஆசையாய் தழுவியது. அதனை அறிந்த லண்டனின் நிலவியல் கழகம்அவருக்கு கொஞ்சம் நிதி உதவியும் செய்தது. அதே நேரத்தில்தான் அவரது டோர்செட் ஊரில் உள்ள அருங்காட்சியகம், அவருக்கு முதன்முறையாக காலகட்டத்தில் கௌரவ உறுப்பினர் தகுதி வழங்கியது.
மேரி ஆன்னிங் தனது 44 வயதில் 1847, மார்ச் 9ம் நாள் இவ்வுலக வாழ்வை விட்டு மறந்தார். அதன் பின்னர் சார்லஸ் டிக்கன்ஸ்(Charles Dickens ) மேரி ஆன்னிங் பற்றி "மேரி ஆன்னிங்கின் வாழ்வும் சாதனைகளும்" என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டார்.
டிரேசி செவாலியர் (Tracy Chevalier) எழுதியுள்ள," Remarkable Creatures" என்ற புத்தகத்தில், மேரி ஆன்னிங் என்ற சாதனையாளர், ஒரு முக்கிய நாயகர். மேரிக்கு அவரின் சிக்கலான சொல்லாடலான " She sells sea shells .." என்ற வரிகள் ரொம்பவே பிடிக்கும்.
மேரி ஆன்னிங்கின் மறைவுக்குப் பிறகு நிலவியல் கழகத்தின் தலைவரான ஹென்றி டி லா பீச் (Henry De la Beche) என்பவர், மேரி ஆன்னிங்கைப் புகழ்ந்து, அவரது கூட்டத்தில் பேசியதுடன் அவர்களின் காலாண்டு இதழிலும் அதனைப் பற்றி வெளியிட்டார். இதுதான் பிரிட்டிஷ் அறிவியல் உலகத்தால், முதல் முதல் ஒரு பெண்ணைப் புகழ்ந்து எழுதப்பட்ட தகவல் ஆகும். அதன்பின் பலருக்கு இதுபோல பெருமை நிகழ்ந்தாலும் 1904 வரை அந்தப் பட்டியலில் பெண்ணே இல்லை என்பதுதான் உண்மை.
[மே 21 - மேரி ஆன்னிங்-இன் பிறந்தநாள்]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

