இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கனிராவுத்தர் குளத்தில் கலக்கும் சாக்கடைக் கழிவு நீரைத் திசை திருப்பி, சின்னசேமூர் சாலையில் இருந்து, சக்தி சாலை பிச்சைக்காரன் பள்ளம் ஓடை வரை, கான்கிரீட் சாக்கடை அமைக்ப்படுகிறது. மழை பெய்யும்போது, குளத்துக்கு மழை நீர் செல்லும் வகையிலும், மழையில்லாத காலத்தில் அவ்வழியாக வரும் சாக்கடை நீர், புதிதாகக் கட்டப்படும் சாக்கடை வழியாகச் செல்லும் வகையிலும், ஷட்டர் அமைக்கப்படவுள்ளது. இனி குளத்தில் சாக்கடை நீர் கலக்காது, குளத்தைச் சுற்றிலும் நடைப்பயிற்சி பாதை, படகு சவாரி, நீர்த்திட்டு பூங்கா அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் ரூ.6 கோடி செலவில் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.