நாமக்கல் அருகே ஒருகாலத்தில் நீராதாரமாக விளங்கிய கொசவம்பட்டி ஏரி, இப்போது கழிவுகள் கொட்டப்படும் பெரும் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை, ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. இவற்றில், நாமக்கல் நகரின் அருகில் உள்ள கொசவம்பட்டி ஏரி, பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி மக்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கியது. அதன் பின் மெல்ல, மெல்ல அதன் அழகும் உருவமும் அழியத் தொடங்கி, தற்போது கழிவுகள் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலைதான் காணப்படுகிறது. ஏரி இருந்த இடம் தெரியாதவாறு கோரைப் புற்களும், முட்புதர்களும் நிரம்பிக் காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, நாமக்கல் பகுதியில் உள்ள உணவகக் கழிவுகள், கட்டட இடிபாடுகள், கோழி இறைச்சிக் கழிவுகள் ஆகியவை கொட்டும் பகுதியாகவும் இந்த ஏரி மாறிவிட்டது.
இதனைத் தூய்மைப்படுத்த யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் நிலைமை. நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர், விரைவில் கொசவம்பட்டி ஏரி தூய்மைப்படுத்தப்பட்டு சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என உறுதியளித்தார்.
அண்மையில், நாமக்கல் வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், கொசவம்பட்டி ஏரியைப் புனரமைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள கொசவம்பட்டி ஏரி சீரமைக்கப்படும்பட்சத்தில், மழைக்காலங்களில் அதிகளவில் நீர் தேங்குவதோடு, நாமக்கல் மக்களின் பல்வேறு தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமையும்.
நாமக்கல் மாவட்டத்தில் காக்கப்பட வேண்டிய நீர் நிலைகளில் முக்கியமானதாக கொசவம்பட்டி ஏரி கருதப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ஏரியைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கிறார்கள் நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

