சென்னை பெருநகரைப் பொறுத்தவரை உலகின் இரண்டாவது பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சென்னையில் 3,637 பேருந்துகள் இருப்பதாகவும், இவற்றில் 3,200 பேருந்துகள் இயக்கத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டும் நாள் ஒன்றுக்கு 2,000 பேருந்துகள் வந்து செல்வதாகவும், சமீபத்திய கணக்கெடுப்பின்படி, அதிகபட்சமாக 36 லட்சம் பேர் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிப்பதாகவும், மற்ற போக்குவரத்து வழிமுறைகளை விட சாலைப் போக்குவரத்து, அதாவது அரசுப் பேருந்துகளையே மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பதும் கூடுதல் தகவல்.