இவர் புத்தத் துறவி ஆனதால் புத்தர் பிறந்த இடத்தை நேரில் பார்ப்பது, புத்தருடைய கொள்கைகளை விரிவாக ஆராய்ந்து அறிவது என்ற உயர்ந்தநோக்கங்களுடன் பல நாடுகள், பயங்கரக் காடுகள், பாலைவனங்கள், மலைகள் என பல இடங்களைக் கடந்து நடைப்பயணமாக இந்தியாவுக்கு வந்தவர்! தமிழகத்தின் காஞ்சிபுரம் வரை வந்துள்ள இவர், தான் பார்த்த, அறிந்து கொண்ட பல்வேறு தகவல்களையும் குறிப்புகளாக எழுதி வைத்து, பின்னாளில் தொகுத்து நூலாக வெளியிட்டார்!
ஹியூன்-ஸங்
கி.பி.640ல் வந்த சீனப்பயணி. இவர் இந்தியா வந்தபொழுது வட இந்தியாவில் ஹர்ஷன் பேரரசனாக இருந்தான். ஹியூன்-ஸங் அவனது ஆதரவில் இருந்து வட இந்தியா முழுவதும் பார்வையிட்டார். பிறகு இவர் தென்னாட்டை அடைந்து, சாளுக்கியன் விருந்தினராகத் தங்கி இருந்தார். அப்பொழுது சாளுக்கியப் பேரரசனாக இருந்தவன் இரண்டாம் புலிகேசி என்பவன். ஹியூன் ஸங் அங்கிருந்து பல்லவ நாட்டை அடைந்தார். இவர் காஞ்சி மாநகரில் நரசிம்மவர்மன் விருந்தினராகத் தங்கி இருந்தார். இவர் காஞ்சிக்கு வந்தது ஏறத்தாழ கி.பி. 640இல் எனலாம். இவர் காஞ்சியைப் பற்றியும் அதனைச் சுற்றியுள்ள நாட்டைப் பற்றியும் எழுதியிருப்பவற்றுள் குறிக்கத்தக்கவை.