மேலும், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO), செம்மொழிக்கான வரையறைகள் அதனிடம் இல்லை என்பதையும், தன்னிடம் இவை இவையே செம்மொழி என்று எந்த பட்டியலும் இல்லை என்பதையும் தெளிவு படுத்துகிறது. தமிழைச் செம்மொழியாக அறிவிக்கும் கோரிக்கை குறித்து கருத்து கேட்க 'சாகித்திய அகடெமி' நிறுவனத்தை அணுகியது நடுவண் அரசு. அந்நிறுவனத் தலைவர், தன்னை தலைமையாகக் கொண்ட ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார். செப்டம்பர் 2, 2004-ல் கூடிய அக்குழு 'செம்மொழி' என்பதற்கான வரையறை எங்கும் காணப்படாததை கண்டறிந்தது. மேலும்,உலகளாவிய அளவில் செம்மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்ஸ்க்ருதம், இலத்தின், கிரேக்கம் ஆகிய மொழிகள், எதன் அடிப்படையில் செம்மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன என்பதை ஆராய்ந்தது. ஒரு மொழியை செம்மொழியாக அறிவிக்க தகுதிகளை வகுத்தது.
பலருடைய தொடர் முயற்சிகளுக்குப் பின், 12.10.2004 தமிழ் மொழி செம்மொழி என நடுவண் அரசால் அறிவிக்கப் பட்டது. அதற்குப்பின் இந்திய செம்மொழிகளின் பட்டியலில் 4 முதல்) சமஸ்கிருதம் , தெலுங்கு (2008 முதல்) கன்னடம் (2008 முதல்) மலையாளம் (2013 முதல்) ஒடியா (2014 முதல்) சேர்க்கப்பட்டது.