கரடுமுரடான, குளிர் நிறைந்த, விருந்தோம்பலுக்குச் சற்றும் பொருத்தமற்ற இமாச்சலப் பிரதேசத்தின் உறைந்த நிலப்பரப்பில் சுவையான சுவையான ஆப்பிள்களை வளர்த்து சாகுபடி செய்பவர் எனும் அடையாளம் கொண்டவரான ரத்தன் மஞ்சரிக்கு இன்னொரு முகமும் உண்டு. ஆம், அவர் ஆப்பிள் சாகுபடியாளர் மட்டுமல்ல, மிகச்சிறந்த போராளியும் கூட. அதனால் தான் இமாச்சலப் பிரதேசத்தின் நூற்றாண்டு பழமை கொண்ட ஆணாதிக்க சட்டத்திற்கு எதிராக பாலின புரட்சிக்கு இவர் தலைமை தாங்குகிறார், இந்தச் சட்டமானது இமாச்சலப் பிரதேசத்தின் பழங்குடி இனங்களில் மூதாதையரின் சொத்துக்களுக்கான வாரிசுரிமையை ஆண்களுக்கு மட்டுமே வழங்க அனுமதிக்கிறது, ஆனால் அது பெண்களுக்கு வழங்கப்படாவிட்டால் எப்படி?! என அந்தச் சட்டத்தின் பாரபட்சத் தன்மையை எதிர்த்துப் போராடி வென்றிருக்கிறார் மஞ்சரி.