இந்த அமைச்சரவை லிஸ்ட்டில் கூட்டணியில் இடம்பெற்ற பிற மாநிலக் கட்சி எம்.பி.க்களின் பங்களிப்பு குறித்து தொடர்ந்து வரும் நாட்களில் ஆலோசிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தமிழகத்தைப் பொருத்தவரை மத்திய அமைச்சரவையில் ஆளும் அதிமுக தரப்பிலிருந்து ஒரே ஒரு அமைச்சர் பதவி கூட குறிப்பிடப்படவில்லை. துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத் குமாருக்கு அமைச்சர் பதவி எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த நம்பிக்கை பொய்த்துள்ளது. இது குறித்த செய்தியாளர் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் பாஜகவின் தமிழகத் தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல. கணேசன், அமைச்சரவையில் அதிமுகவை சேர்த்துக் கொள்வது பற்றி எதிர்காலத்தில் திட்டங்கள் இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.