20 நாடுகளில் அதிபர் தேர்தலும், 7 நாடுகளில் நாடாளுமன்ற தேர்தலும், 29 நாடுகளில் பொது தேர்தலும் நடைபெறுகின்றன. இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 90 கோடி பேர் வாக்களார்கள். தேர்தல் நடக்க இருக்கும் மற்ற 55 நாடுகளின் மொத்த மக்கள் தொகையே 120 கோடி தான். ஆட்சிமுறை என்பது முழுமையான ஜனநாயகம், குற்றமுள்ள ஜனநாயகம், கலப்பு ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. குறைபாடுகள் கொண்ட ஜனநாயக நாடுகள் பட்டியலில் ஜப்பான், போர்ச்சுகல், பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, பிரேசில், மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றழைக்கப்படும் இந்தியா, இந்தப் பட்டியலில் 41வது இடத்தில் உள்ளது.