ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை பல்லாயிரக்கணக்கான பிரபலங்களை அது கண்டிருக்கலாம். அதில், இந்தியா மற்றும் அயல்நாடுகளைச் சேர்ந்த அரச குடும்பத்தினரும் கூட அடங்கலாம். அவர்களில் தாங்களும் சாதாரண விமானப் பயணிகளில் ஒருவர் தான், தங்களுக்கென கொம்புகள் எதுவும் முளைத்திருக்கவில்லை, என்று இயல்பாக நடந்து கொண்டவர்கள் வெகு சொற்பமானவர்களே இருக்கக் கூடும். ஸ்வீடன் ராஜாவும், ராணியும் கூட அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இன்று அவர்களை இன்று ஏர் இந்தியா மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து செய்தி ஊடகங்களும் கூட புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றன.