இதற்கொரு உதாரணம். இது மீடூ புகாராக அளிக்கப்படவில்லை என்ற போதும் இதுவும் ஒரு பாலியல் வன்முறை புகார் தான். 2014 ஆம் ஆண்டில் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தொழிலதிபர் நெஸ் வாடியா மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டை மும்பை நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்தது. இந்த வழக்கின் பூர்வீகத்தை ஆராய்ந்தால், கடந்த 2014 ஆம் ஆண்டில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தனது முன்னாள் காதலரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான நெஸ்வாடியா தன் மீது பாலியல் அத்துமீறல் நடத்தியதாக ப்ரீத்தி ஜிந்தா அவர் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வாடியா மன்னிப்புக் கேட்டால் தான் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ப்ரீத்தி ஜிந்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போது மன்னிப்புக் கேட்க வாடியா ஒப்புக் கொள்ளாத காரணத்தால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு நான்காண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தற்போது இந்த வழக்கில் ப்ரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா இரு தரப்பிலும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வழக்கு சுமுகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. ப்ரீத்தி வழக்கை வாபஸ் பெற்றதற்கு மட்டுமல்ல, வழக்கு தொடர்ந்ததற்கும் நெஸ் வாடியா அவரது முன்னாள் காதலர் என்பதும் ஒரு காரணமென மும்பை பத்திரிகைகள் எழுதின. தமது முன்னாள் காதலரான நெஸ் வாடியா, தற்போது வேறொரு பெண்ணுடன் காதலில் இருப்பதை தாங்க முடியாமல் தான் ப்ரீத்தி அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பினார் என்றும் கூறப்பட்டது. தற்போது வழக்கு சமரசமாக முடிக்கப்பட்டதின் பின்னணி இரு தரப்பினரும் சமாதானம் அடைந்து ப்ரீத்தி வழக்கை வாபஸ் பெற்றார் என்று கூறப்பட்டிருக்கிறது.