‘சம்பவத்தன்று தினேஷ் கையில் அரிவாளுடன் தன் வீட்டுக்குள் நுழைந்த போது தானும் தன் மகளும் பூக்கட்டிக் கொண்டு இருந்ததாகவும், அப்போது ஆத்திரத்துடன் வீட்டினுள் நுழைந்த தினேஷ், தன் மகள் ராஜலட்சுமியை நெஞ்சில் எட்டி உதைத்து ஜாதி ரீதியிலான கடும் வசைச் சொற்களுடன் அவளை வெட்டக் கையை ஓங்கிஒய நேரத்தில், சிறுமி பயத்தில் மிரண்டு கண்ணீருடன்... ஐயோ நான் என்ன தவறு செய்தேன்... என்னை ஏன் அண்ணா வெட்டப் பார்க்கிறீர்கள்? என்று கதறினாள். ஆனாலும் தினேஷ் மனமிரங்காது அவளைத் துரத்திச் சென்று பின் கழுத்தில் அரிவாளால் வெட்டியதில் தலை தனியாகத் தொய்ந்து விழுந்தது. தலையில்லாத உடல் மட்டும் துடித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்டபோது என் பெற்ற மனம் தாங்கவில்லை. அவளது உடலை மடியில் கிடத்தி கதறிக் கொண்டிருந்தேன். என் மகளை ஈவு இரக்கமின்றி வெட்டியதோடு அவளது தலையைக் கையிலேந்திக் கொண்டு தன் வீட்டுக்குச் சென்றிருக்கிறான் அந்த தினேஷ். அவன் வந்த கோலத்தைக் கண்டு அவனது மனைவி, இந்தத் தலையை ஏன் கையிலேந்திக் கொண்டு வந்திருக்கிறாய், அதை அங்கேயே வீசி விட்டு வருவதற்கென்ன? என்று கண்டித்து விட்டு அப்படியே கணவனோடு, தன் சகோதரனையும் அழைத்துக் கொண்டு ஒரே இருசக்கர வாகனத்தில் ஏறி காவல்நிலையம் சென்றனர்.