மகத ராஜ்யங்கள் சீர்ப்படும் முன்பாக இந்துஸ்தானத்தில் மிகுந்த பெருமையோடிருந்தது கோசலமே. கோசல ராமனுக்காய் பாபர் மசூதி இடித்தார்கள், அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு கடைசியில் ஒருவழியாகத் தீர்ப்பு வழங்கப்படுகையில் நீதிபதிகள் ஒப்புக் கொண்டார்கள். ராமன் பிறந்த இடம் அதுவென்று. சீதையின் சமையலறை இதுவென்று தொலைக்காட்சியில் அன்று நொடிக்கொரு தரம் காட்டினார்கள். இது கற்பனை அல்ல. சிந்து சமவெளி நாகரிக காலத்து ஹரப்பா, மொஹஞ்சதாரோ, டோலவிரா நகரங்களையே அகழ்ந்தெடுக்கும் போது அதற்கும் பிற்பட்ட காலத்து ராமன் வாழ்ந்த இடமாக அயோத்தி ஏன் இருக்க முடியாது?!