இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைகள் மேலும், மேலும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றனவே தவிர, குறைகிற வழிகளைக் காணோம். இப்படியான சூழலில் சில பாலியல் குற்றச்செயல்களின் போது குற்றவாளிகள் குற்றத்தையும் செய்து விட்டு அதற்கான போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் குற்றங்களில் இருந்தும், தண்டனையில் இருந்தும் முற்றிலுமாக விடுவிக்கப்பட்டு விடுகிறார்கள். குற்றவாளிகள் இப்படி தந்திரமாகத் தப்பும் நிலை இனியும் ஏற்படக்கூடாது. பாதிக்கப்பட்ட பெண்களால் இனியும் போதுமான ஆதாரங்களைச் சமர்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடக்கூடாது எனும் எச்சரிக்கை மற்றும் பொறுப்புணர்வுடன் மணிபுரியைச் சேர்ந்த ஷீனு எனும் கல்லூரி மாணவி இப்படி ஒரு மேம்படுத்தப்பட்ட உள்ளாடையொன்றைக் கண்டறிந்து அதைப் பெண்களிடையே அறிமுகப்படுத்தி இருக்கிறார்.