இந்தக் கவிதை ஆண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அனைத்துப் போராட்டங்களை பற்றியும் சொல்லவில்லை என்றாலும், ஆணாகப் பிறந்ததால் அவர்கள் வலிமையானவர்கள் அவர்களுக்கு உணர்ச்சிவசப் பட தெரியாது என்கிற பொய்யை இனியும் நாம் நாம்பக் கூடது என்பதை நமக்கு புரிய வைக்கிறது. பெண்களைப் போல் அவர்களுக்கும் சோகம், அழுகை, வலிகள் உண்டு என்பதைப் புரிந்து கொள்வோம். ஒருவேளை அவர்கள் அதைச் சொல்லாமல் மறைத்து வைத்து தனக்குள்ளேயே புழுங்கலாம், ஆனால் அவர்களும் கண்ணீர் விட்டு அழ மடி கொடுத்து, தலை சாய்க்க தோள் கொடுத்து தேற்றுவோம், ஒரு வகையில் இதுவும் பெண்ணியம் தான்.