அதில் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் மீது நிதி மோசடி வழக்கு சுமத்தப் பட்டிருந்தது. அந்த வழக்கின் மீதான விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்டவரான பெண்மணி அழைத்து வரப்பட்டிருந்தார். அவர், பிறந்து 4 மாதங்களே ஆன கைக்குழந்தையின் அம்மாவும் கூட. நீதிமன்றத்தின் உள்ளே வழக்கின் விசாரணை, அவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 33 பேர்களுடன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. விசாரணைக்காக உள்ளே செல்லும் முன், குழந்தையின் தாயானவர், தன் குழந்தையை பெண் போலீஸ் அதிகாரியான ஹயோ லினாவிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றிருந்தார். இந்நிலையில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, அந்தப் பெண்மணி வெளியில் வர முடியாத ஒரு சூழலில், அவரது கைக்குழந்தை பசியால் வீறிட்டு அழத்தொடங்கியது.