டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் – 2017

இந்த வருடமும் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வாசகசாலையின் "முப்பெரும் விழா" மேடையில், இவ்வருடத்திற்கான 'தமிழ் இலக்கிய விருதுகள்' வழங்கப்படவுள்ளன.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:42 pm

RKV

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 

நமது வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் கடந்த இரண்டு வருடங்களாக சிறந்த படைப்புகளுக்கு தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருவது நீங்கள் அறிந்த ஒன்றே!

அந்த வகையில் இந்த வருடமும் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வாசகசாலையின் "முப்பெரும் விழா" மேடையில், இவ்வருடத்திற்கான 'தமிழ் இலக்கிய விருதுகள்' வழங்கப்படவுள்ளன. கடந்த வருடம் சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த நாவல் மற்றும் சிறந்த சிறுகதைத் தொகுப்பு ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. இம்முறை அவற்றோடு 'சிறந்த அறிமுக எழுத்தாளர்' என்ற பிரிவையும் சேர்த்து மொத்தம் ஐந்து பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

விருது பெறும் படைப்பாளிகளுக்கு விருதோடு சேர்த்து ரூபாய் 5000 பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

முழுக்க தேர்ந்த வாசகர்களை மட்டுமே கொண்ட தேர்வுக்குழுவின் மூலம், நமக்கு அனுப்பப்படும் அனைத்து படைப்புகளையும் படித்து விவாதித்து, நேர்மையான முறையில் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும் விருதுகள் என்பதே வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகளின் தனிச்சிறப்பு..!

இவ்விருதுகளுக்கு உங்களது படைப்புகளை அனுப்புவதற்கான விதிமுறைகள் கீழே...

  • மேற்கண்ட ஐந்து பிரிவுகளின் கீழ்வரும் படைப்புகள் எதுவாகினும் அவை 2016 நவம்பரிலிருந்து 2017 அக்டோபர் மாத காலகட்டத்திற்குள் மட்டுமே வெளிவந்தவையாக இருக்க வேண்டும்.
  • மொழிபெயர்ப்பு படைப்புகளுக்கு விருது இல்லை.
  • படைப்புகள் அனைத்தும் முதற் பதிப்பாக இருக்க வேண்டும். மறு பதிப்பு / மறுபிரசுரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
  • படைப்புகளில் ஒரே ஒரு பிரதியை மட்டும் எங்களுக்கு அனுப்பினால் போதுமானது. ஆனால் அதனை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி 15.10.2017.
  • எனவே படைப்பாளிகள், பதிப்பகத்தார் மற்றும் வாசகர்கள் அனைவரும் மேற்கண்ட நிபந்தனைகளின் கீழ் வரும் படைப்புகளை வாசகசாலைக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
  • விருதுகளுக்குத் தகுதியானவையாக வாசக நண்பர்கள் கருதும் புத்தகங்களை வாசகசாலைக்குப் பரிந்துரையும் செய்யலாம்.

முக்கிய குறிப்பு:

இவ்விருதுகளுக்காக வாசகசாலைக்கு அனுப்பப்படும் புத்தகங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு அனுப்பப்படாத புத்தகங்கள் எதுவாகினும் எக்காரணம் கொண்டும் அவை தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

மேலும் இது தொடர்பான தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள:-

கார்த்திகேயன் - 9942633833
அருண் - 9790443979
கிருபா - 9940191177
மாரி – 9600348630

புத்தகங்களை அனுப்ப வேண்டிய முகவரி: -

வெ.கார்த்திகேயன்,
80, சுவாமிநாதன் இல்லம், (மூன்றாவது வீடு, தரைத்தளம்)
முதல் பிரதான சாலை, 
ஸ்ரீ சத்ய சாய் நகர்,
மாடம்பாக்கம் பிரதான சாலை, 
ராஜ கீழ்ப்பாக்கம்,
கிழக்கு தாம்பரம், 
சென்னை - 600073
தொடர்பு எண் - 9942633833

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.