நாம் இதுவரை எத்தனையோ விதமான உணவகங்களைக் கண்டிருக்கலாம். மலைக்குகைகளுக்குள் உணவகம், பாறை உச்சியில் திறந்த வெளி உணவகம், பழைய வேன்கள் மற்றும் மினி பேருந்துகளை ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளுக்கான ரெஸ்டாரெண்டுகளாக்கிய மொபைல் உணவகம், பாதாள உணவகம், சுழலும் உணவகங்கள், நீருக்குள் மிதக்கும் உணவகங்கள் என எத்தனை, எத்தனையோ உணவகங்களைக் கண்டிருப்போம். ஆனால், அவற்றில் எதுவுமே இந்த உணவகத்தைப் போன்றதாக இருக்க வாய்ப்பில்லை. ஜோர்டானில் இயங்கும் இந்த மிகச்சிறிய உணவகம் என்பது ஒரு சிறிய காருக்குள் வடிவமைக்கப்பட்ட குட்டியூண்டு மொபைல் உணவகம். நம்மூர் நானோ கார் போன்று தோற்றம் தரும் இந்தக் கார் வோக்ஸ்வேகன் பீட்டில்ஸ் வகையைச் சேர்ந்தது. பழைய காரை, இப்படி துக்கினியூண்டு உணவகமாக மாற்றி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஐடியா அந்த உணவக ஓனருக்கு எப்படி வந்ததோ தெரியவில்லை. ஆனால், இந்த ஐடியாவைப் பாராட்டத்தான் வேண்டும்.