எவ்வளவு விலை கொடுத்தாலும் கலைக்கு ஓர் விலை வைக்கமுடியுமா? விலை மதிப்பில்லாத இந்த ஓவியத்தை வரைந்தவர் மோனொலிசாவைப் படைத்த லியொனொர்டொ டா வின்சி. டா வின்சியின் இந்த ஓவியம் 'சால்வேட்டர் முண்டி’ ‘Salvator Mundi' சமீபத்தில் விடப்பட்ட ஏலத்தில் கிட்டத்தட்ட 295 கோடிக்கு (450.3 மில்லியன் டாலர்களுக்கு) விற்பனையாகி உள்ளது. இதுவரை ஓவியத்துக்கு கொடுக்கப்பட்ட விலைகளில் மிக அதிகமானது என்ற பெருமை பெற்று உலகச் சாதனை படைத்துள்ளது.
_Salvator_Mundi_circa_1500.jpg)
இயேசு கிறிஸ்துவின் கனிவும், தீட்சண்யமான கண்களும் குறும்புன்னகையும் மிகத் துல்லியமாக வரையப்பட்டுள்ளது இந்த ஓவியத்தின் தனிச்சிறப்பாகும். மிகச் சிறப்பான கலையம்சம் பொருந்திய இந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது என்றனர் பார்வையாளர்கள்.

இதற்கு முந்தைய சாதனையான 179,364,992 டாலர்களைப் பெற்றுத் தந்தது பிகாஸோவின் 'Les Femmes d'Alger’ எனும் ஓவியம் டாவின்சியின் 'Horse and Rider' ஓவியம் 2001-ம் ஆண்டில் 11,481,865 டாலர்களுக்கு ஏலத்தில் விலை போனது.

'சால்வேட்டர் முண்டி’ என்ற இந்த ஓவியத்தை லியொனார்டோ டா வின்சி 1500-ம் ஆண்டின் துவக்கத்தில் வரைந்துள்ளார். அதன் பின் பல காலகட்டங்களில் இருபதுக்கும் மேலான அதன் நகல்கள் உருவாகின. கலை வரலாற்று ஆசிரியர்கள் அசல் எது நகல் எது எனப் பிரித்துச் சொல்லக் கூடியவர்கள். அவர்கள்தான் இந்த 20 பிரதிகளை அடையாளம் கண்டுள்ளனர். அசல் படைப்பான சால்வேட்டர் முண்டி நீண்ட காலத்துக்குப் பிறகு காணக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தனர்.

கலைப்பொருட்களை விற்பனை செய்யும் ராபர்ட் சைமன் என்பவர் 2005-ல் ஒரு கலைஞனிடமிருந்து இந்த ஓவியத்தை வாங்கி இருக்கிறார். அந்த ஓவியத்தைப் பற்றிய தகவல்களை மீட்டெடுக்க தனது நண்பரான டயான்னி மோடிஸ்டினிடம் யோசனை கேட்டுள்ளார்.

டயானாவின் முயற்சியால் இந்தப் ஓவியம் லியொனார்டோ டா வின்சியின் 'சால்வேட்டர் முண்டி’ என்று கண்டுபிடிக்கப்பட்டது. டயானாவின் வாழ்க்கையில் மிகவும் கடினமான நாட்களை கடக்க இந்த ஓவியம் உதவியது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


