டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பாரிஸின் முதல் நிர்வாண உணவகம் ‘ஓ’ நேச்சுரலில் அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்தியாவில் இப்படியான உணவகத்தைக் கனவிலும் நினைத்துப் பார்த்திட வாய்ப்பில்லாத பொழுதில் பாரிஸில் உதயமாகி இருக்கும் இந்த நிர்வாண உணவகம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருப்பதில் ஆச்சர்யமேதுமில்லை.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:04 pm

RKV

இந்தியாவில் இப்படியான உணவகத்தைக் கனவிலும் நினைத்துப் பார்த்திட வாய்ப்பில்லாத பொழுதில் பாரிஸில் உதயமாகி இருக்கும் இந்த நிர்வாண உணவகம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருப்பதில் ஆச்சர்யமேதுமில்லை.

உலகில் நிர்வாணத்தை அதன் புனிதத் தன்மையோடு அங்கீகரிக்கும் நாடுகளின் பட்டியலில் ஃபிரான்ஸ் எப்போதும் முன்னிலை வகிக்கத் தயங்கியதில்லை. நிர்வாணத்தை விரும்பும் மக்களின் மெக்கா, மதினா, காசி, குருத்வாரா, பெத்லகேம் எல்லாமும் பாரிஸ் நகரம் தான் என்று சொன்னால் கூடத் தவறில்லை. அந்த அளவுக்கு நிர்வாணத்தை பூஜிக்கும் நாடாக ஃபிரான்ஸும் அதன் தலைநகர் பாரிஸும் திகழ்கின்றன. ஃபிரான்ஸின் மக்கள் தொகையில் 2.6 மில்லியன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து நிர்வாணத்தை கடைபிடித்து வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மக்களது இந்த மனநிலையை ஊக்குவிக்கும் வகையில் ஃபிரான்ஸ் அரசும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அரசு செலவில் சுமார் ஃபிரான்ஸ் நாட்டுக்குள் சுமார் 460 இடங்களை நிர்வாணச் சுற்றுலாவுக்கென ஒதுக்கியுள்ளது. அவற்றுள், ஏறத்தாழ 155 இடங்கள் இரவில் தங்கிச் செல்லக் கூடிய வகையிலான சுற்றுலா முகாம்கள், இவை தவிர 73 கடற்கரைச் சுற்றுலா மையங்களும் அதனுள் அடங்கும்.

அதுமட்டுமல்ல, உலகின் ஃபேஷன் தலைநகருமே ஃபிரான்ஸ் தான் என்கையில் உலகின் நவீனமான புத்தம் புதிய முயற்சிகள் அனைத்தும் ஃபிரான்ஸில் இருந்தே துவங்கப் பட வேண்டும் என்ற உந்துதல் ஃபிரான்ஸ் அரசுக்கு எப்போதும் உண்டு. அப்படியிருக்கையில் முன்னமே இப்படி ஒரு நிர்வாண உணவகம் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருக்கையில் ஃபிரான்ஸால் சும்மா இருக்க முடியுமா? ஜப்பானின் அந்த உணவகத்தைக் காட்டிலும் மேலும் சிறப்பு அம்சங்களுடன் கூடிய புத்தம் புது நவீன நிர்வாண உணவகத்தை ஓ நேச்சுரல் ( 'O' Naturel) என்ற பெயரில் ஃபிரான்ஸ் துவங்கி விட்டது. ஜப்பானின் நிர்வாண உணவகமான ‘அமிர்தா’ வில் உணவருந்தச் செல்லும் வாடிக்கையாளர்கள், தங்களை நிர்வாணப் படுத்திக் கொள்வதற்கு முன்பு தங்களது எடையைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற விதி உண்டாம். ஆயினும் அந்த விதியை வாடிக்கையாளர்களில் பலர் விரும்புவதில்லை. ஃப்ரான்ஸ் உணவகத்தில் அப்படியான கண்டீஷன்கள் எதுமில்லை என்கிறார்கள்.

Story image

இந்த உணவகத்துக்குள் நுழைந்ததும் தம்பதிகளோ அல்லது குடும்பத்தினர் அனைவருமோ மிகச் சுதந்திரமாக ஆடைகளைக் களைந்து அவரவர் ஆடைகளை உணவகத்தின் கிளாக் ரூமில் பத்திரப்படுத்தி விட்டு இயற்கை அளித்த பெருங்கொடையான தத்தமது சொந்த சரீரத்துடன் மிக இயல்பாக, ரிலாக்ஸாகப் பேசிக் கொண்டே இந்த உணவகத்தில் உனவருந்தலாம் உலகின் பிற உணவகங்களுக்குச் செல்லும் போது எத்தகைய சுதந்திரத்தையும், சிறப்பு வசதிகளையும் உணர்வார்களோ அதே விதமான அற்புதமான விருந்துபசரிப்பு அணுகுமுறையை இந்த உணவகமும் அவர்களுக்கு வழங்கத் தயங்காது என்கிறார்கள் இதன் நிறுவனர்களான சதா சகோதரர்கள்.

சுமார் 40 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ணும் வகையிலான இந்த உணவகத்தில் பஃபே வசதியும் உண்டு, இந்த உணவகத்துக்குச் செல்ல ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாமாம்.

எல்லாம் சரி ஆனால் சுடச்சுட டேபிளுக்கு வரும் உணவு வகைகளில், ஆவி பறக்கும் வான்கோழி பிரியாணி முதல் கொதிக்கும்  நத்தை சூப் வரை இவற்றுள் ஏதோ ஒன்று ஆடைகளற்ற உடலில் கொட்டி புண்ணாகி விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறது தானே நமது காமன் மேன் இந்தியச் சிந்தனை. சரி விடுங்கள்... அதை அவர்களே சமாளித்துக் கொள்வார்கள்.

உலகம் முழுவதிலும் வாழும் மக்களில் நிர்வாணத்தைப் புனிதமாகக் கருதும் அனேகர் இந்த வகையான உணவகங்களை ஆராதிக்கக் கூடும்.

Image Courtesy: facebook, google

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.