'பியூட்டி கதூன்' எனும் 16 வயதே ஆன இச்சிறுமி தன் பெற்றோருடன் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றார். அங்கே மணமக்களை வாழ்த்தி பரிசளிக்கலாம் என்று அருகே போனதும் கதூன் அதிர்ந்து போனார். ஏனெனில் மணப்பெண் கதூனை விட மிகச் சிறுமி. அப்போது தான் கதூனுக்கு புரிந்தது; தான் கலந்து கொண்டிருப்பது ஒரு 'குழந்தைத் திருமண' நிகழ்வு என்று. 8 ஆம் வகுப்பு மாணவியான கதூனுக்கு வகுப்பில் சமூக அறிவியல் பாடத்தை கற்பித்த ஆசிரியர் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். ஏனெனில் குழந்தைத் திருமணம், சதி உள்ளிட்ட சமூகக் கேடுகளை எதிர்த்துப் போராடிய ராஜா ராம் மோகன் ராய் உள்ளிட்ட மேற்கு வங்க ஆளுமைகள் எல்லாம் கதூனின் நினைவில் சிறகடிக்க உடனே கதூன் மதம் கொண்ட வேளம் ஆனார்.