படிக்கப் படிக்க வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது பண்டைய இந்திய வரலாறு. நாம் இது வரையிலும் நினைத்திருந்தது மாரியம்மன், கருப்பசாமி, ஐயனார், காளியம்மன் இன்னும் பலப் பல பெயர்களில் எல்லா கிராமங்களிலும வணங்கப்பட்டுக் கொண்டுள்ள சிறுதெய்வங்கள் மட்டுமே இறந்து போன மூதாதையர்கள் அதாவது அவர்களது மரணத்தின் பல ஆண்டுகளுக்குப் பிறகு தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்ட கிராம தெய்வங்கள் என்பதே... ஆனால் சரித்திரம் கூறுவது என்னவென்றால் நம் பிரதான தெய்வங்களான ராமன், கிருஷ்ணன், மகிசாசுர மர்த்தினி, பசுபதி (சிவன்), ஏன் பலராமன், இந்திரன், இந்திரன் மனைவி உஷா, எமன் (கிரேக்க புராணங்களில் இமா) எல்லோருமே பழங்குடி மக்களின் மூதாதையர்கள், அதாவது இந்தியப் பூர்வபழங்குடி மக்கள் வணங்கி வந்த தாய் தெய்வங்கள் மற்றும் ’இந்தோ ஆரியக்’ கலப்பின தலைவர்களில் பல வெற்றிகளை பெற்ற ஆரியகுல வீராதிவீரர்கள் போன்றவர்கள் தான்.