தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நிஜமாகவே பண மழையில் நனைந்த குஜராத்தி நாட்டுப்புற பாடகிகள்!

ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் தங்களது மனம் கவர்ந்த நாட்டுப்புற பாடகிகளை மேலும் உற்சாகப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு, அவர்கள் மீது 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை மழை போல வர்ஷிக்க ஆரம்பித்தார்கள்.

News image
Updated On :27 டிசம்பர் 2016, 12:25 pm

நாடு முழுதும் ரூபாய் நோட்டு பிரச்சினையால் மக்கள் அவதிப் பட்டு வரும் சூழலில், குஜராத்தில் நடைபெற்ற ஒரு வினோத நிகழ்வு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் நவசாரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடகர்கள் கலந்து கொண்டு தங்களது பாடல்கள் மூலம் ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்தனர். அப்போது ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் தங்களது மனம் கவர்ந்த நாட்டுப்புற பாடகிகளை மேலும் உற்சாகப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு, அவர்கள் மீது 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை மழை போல வர்ஷிக்க ஆரம்பித்தார்கள்.

கடந்த ஞாயிறு அன்று ‘ஸ்ரீ கூர்ஜர ஷத்ரிய கடிய சமாஜ்’ எனும் அமைப்பின் சார்பின் நடத்தப் பட்ட இந்த இசை நிகழ்வில், ‘ஃபரிதா மிர்’ மற்றும் ‘மாயாபாய் அஹிர்’ எனும் இரு நாட்டுப்புற பாடகிகளும் பண மழையில் நனைக்கப் பட்டனர். முன்னதாக குஜராத்தின் பானஸ்கந்த மாவட்டத்தைச் சேர்ந்த பலன்பூரில் நாட்டுப்புற பாடகி ‘கிர்த்தி தன் காத்வி’ மீது ரசிகர்கள் புதிதாக வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை வீசி தங்களது இசை ஆர்வத்தை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத் தக்க விசயம். அந்த குறிப்பிட்ட இசை நிகழ்ச்சியில் பாடகிகள் மீது வர்ஷிக்கப் பட்ட பன மழையின் மொத்த மதிப்பு 47 லட்சம் ரூபாய்கள் எனவும், 1 கோடி ரூபாய்க்கும் மேலிருக்கலாம் எனவும் இரு விதமான தகவல்கள் இணையத்தில் உலவுகின்றன.

பண மழை வீடியோ...

video courtsy: india24/7 online.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.