டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இது  முற்றிலும் நியாயப் படுத்த முடியாத குற்றம்!

குழந்தைகள் தெய்வீகமானவர்கள், அதிலும் பச்சிளம் குழந்தை பரிசுத்த அன்பிற்கு முழு உரிமை கொண்டது. அதன் உரிமைகளை மறுத்து எங்கோ காட்டுக்குள் வீசிச் செல்பவர்கள் மனிதர்களே அல்ல!

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:59 pm

கார்த்திகா வாசுதேவன்

“திருமலை கல்யாண கட்டா அருகில்  ‘ஆண் சிசு’ ஒன்றை தேவஸ்தான ஊழியர்கள் மீட்டனர். திருமலையில் முடிகாணிக்கை செலுத்தும் கல்யாண கட்டா பகுதியில், ஒன்றரை மாத ஆண் குழந்தை ஒன்று வியாழக்கிழமை காலையில் தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. இதைக் கேட்ட அங்கிருந்த ஊழியர்கள், அக்குழந்தையை திருமலை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் திருப்பதியில் உள்ள தேவஸ்தான அனாதை விடுதியில் குழந்தையை அளித்து பராமரித்து வருகின்றனர். குழந்தையை விட்டுச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.”

இது இன்றைய தினமணியில் வந்த செய்தி;

இதெல்லாம்  எப்படிச் சாத்தியமாகிறது?! கொஞ்சமும் மனிதாபிமானமற்ற செயல். பிறந்து ஒன்றறை மாதத்தில் தனக்கென ஒருவருமின்றி அனாதையாக அந்தக் குழந்தை என்ன மகாபாரதக் கர்ணனா? குழந்தையை விட்டுச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகிறார்களாம். அவர்களின் தேடலில் இப்படி செய்யத் துணிந்த பொறுப்பற்ற பெற்றோர்களையோ, உறவினர்களோ கண்டுபிடிக்கப் பட்டால் சரி. ஆனால் நிஜமாகவே காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே இனந்தக் காலத்தில் கஷ்டம்,  இந்தக் குழந்தை விசயத்தில், குழந்தைக்கு உரியவர்கள், குழந்தையை நிராகரித்து வேண்டுமென்றே அந்த இடத்தில் விட்டு விட்டுச் செல்பவர்களாக இருப்பவர்கள் எனில் அவர்கள் நிச்சயம் காவல்துறையின் நடவடிக்கைகளை எல்லாம் எங்கிருந்தாவது கண்காணித்துக் கொண்டிருக்கவும் சாத்தியமுள்ளது. ஒழிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடுபவர்களை கண்டுபிடிப்பது சுலபமில்லையே!

குழந்தைக் கடத்தல்கள் மோசம் என்றால் பெற்றோர் அல்லது உறவினர்களால் ஏதுமறியா வயதில் குழந்தைகள் நிராகரிக்கப் படுவது என்பது மிக மிக மோசமான விசயம். உலகெங்கும் குழந்தைகள் நிராகரிக்கப் படுவதற்கான பொதுவான காரணங்களாக முன் வைக்கப் படுபவை ஒரு சில விசயங்கள் தான்;

இந்து திருமணச் சட்ட விதிகளின் படி இல்லாமல் முறையற்ற உறவில் பிறக்கும் ஒரு சில  குழந்தைகளின் எதிர்காலம் இப்படி அநாதரவாகி விட வாய்ப்புகள் அதிகம்.

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகளும் அதைத் தொடர்ந்து ஏற்படும் விவாகரத்துகளும் கூட சில சமயங்களில் இதற்கொரு முக்கியக் காரணமாகி விடுகிறது.

80 களின் தமிழ் சினிமாக்களில் காட்டப் பட்டது போல தமது பகைவர்களை வேரோடு அழித்து ஒழிக்க வில்லன் கோஷ்டி செய்யும் பழி வாங்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் இது இருக்கலாம்.  அதாவது  நீண்ட காலப் பகையின் காரணமாக எதிரிகள் குழந்தைகளை கடத்தி வந்து இப்படி அனாதைகளாக்க முயற்சிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் இது முற்றிலும் நியாயப் படுத்தவே முடியாது ஒரு குற்றம்.

குழந்தையை விட்டிச் சென்றவர்கள் குழந்தையின் பெற்றோர்களாக இருந்தாலும் சரி, அதன் உறவினர்களாக இருந்தாலும் சரி, அல்லது சினிமாவில் வருவது போல பகைவர்கள் வேலையாக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் மிக மோசமான மனநோயாளிகளே. இவர்கள் 1 சதவிகிதம் கூட வாழத் தகுதியற்ற மனநிலை கொண்டவர்கள். 

மண்ணில் பிறந்து விழும் எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த பூமியில் வாழ வழியுண்டு, வகையுமுண்டு. ஆனால் ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு எவராலோ முனைந்து அனாதைகளாக்கப் படும் குழந்தைகள், தங்களுக்கென்று கட்டமைக்கப்பட்ட குடும்ப அமைப்பும், குடும்ப உறவுகளும் இன்றி வாழ நிர்பந்திக்கப் படுவதும் கூட ஒரு வகையில் சமூகக் குற்றமே!

கே.பாலசந்தர் இயக்கத்தில்  சிந்து பைரவி திரைப்படத்தில் நானொரு சிந்து எனத் தொடங்கும் பாடலில் ஒரு வரி;

‘என கதை எனக்கது தெரிந்திருந்தாலே கர்பத்தில் நானே கரைந்திருப்பேனே...’

என இருக்கும். நிஜம் தான். கருவில் தங்கள் எதிர்காலம் தெரிந்து விட்டால் அனேகம் சிசுக்கள் இந்த உலகை எட்டியும் பாராமல் கரைந்து போய் விட வாய்ப்புகள்  உண்டு.

குழந்தைகள் தெய்வீகமானவர்கள், அதிலும் பச்சிளம் குழந்தை பரிசுத்த அன்பிற்கு முழு உரிமை கொண்டது. அதன் உரிமைகளை மறுத்து எங்கோ காட்டுக்குள் வீசிச் செல்பவர்கள் மனிதர்களே அல்ல!

இந்தக் குழந்தையின் உரிமையாளர்களைக் கண்டறிந்து அவர்களிடம் குழந்தை ஒப்படைக்கப் படுவதைக் காட்டிலும், குழந்தைகள் இன்றித் தவிக்கும். குழந்தைகளைத் தத்தெடுத்தாவது வளர்க்க நினைக்கும் தம்பதிகள் எவரிடமாவது ஒப்படைக்கப் பட்டால் அதன் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உத்திரவாதமுண்டு.

எது நிகழ்ந்தாலும் அது குழந்தைக்கு நன்மை விளைவிப்பதாக நிகழட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.