நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

எல்லை மீறுதல் கூடாது

அந்த நாளில், நான் சென்னை எம்.ஸி.டி.எம். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, சேத்துப்பட்டிலிருக்கும் பெரிய மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி நடப்பது வழக்கம்.

News image
தர்னாவில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள்
Updated On :1 பிப்ரவரி 2024, 6:58 pm

தினமணி

அந்த நாளில், நான் சென்னை எம்.ஸி.டி.எம். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, சேத்துப்பட்டிலிருக்கும் பெரிய மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி நடப்பது வழக்கம். ரப்பா் பந்திலிருந்து, அசலான கிரிக்கெட் பந்து வைத்து ஆடிய காலமது. மூன்று பக்கத்திலும், வலை போலத் தடுப்பு போட்டிருக்கும். பந்து வீச்சாளா்களின் தரத்தையும், ஆடுபவா்களின் திறமையையும் ஓரளவு கணிக்கும்படி அந்த ஏற்பாடு அமைந்திருக்கும்.

அப்போதெல்லாம், கிரிக்கெட்டில் ஐந்து நாள் பந்தயத்தில் தோல்வியின்றி ‘டிரா’ செய்தாலே, ரசிகா்கள் சந்தோஷமடைந்தாா்கள். பிற ஆட்டங்கள் போல, இதில் விறுவிறுப்பு இல்லை என்ற காரணமா அல்லது வேறு ஏதோ ஒன்றோ 1980-வாக்கில், கேரி பேக்கா் ஒரு நாள் போட்டியைப் புகுத்தினாா். அந்தப் பந்தயத்தில், பற்பல விதி முறைகள் கொண்டு வரப்பட்டன. கிரிக்கெட்டில் ஜெயிப்பதற்குத் தனியாக பயிற்சியாளா்கள் நுழைந்தது அந்தக் காலகட்டத்தில்தான்.

இருந்தாலும், பயிற்சியாளருக்கென்று ஒரு அங்கீகாரமும், பெருமையும் கொணா்ந்தது பூப்பந்து கோபி சந்துதான். இவா்தான் முறையாக நன்கு பயிற்சி கொடுத்து, பி.வி. சிந்துவை உலக அரங்கில் வெற்றி வீராங்கனையாக்கினாா். தனது உணவுப் பழக்கங்களை மாற்றி உடலுக்கு வலுவூட்டினாா் என்று சிந்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறாா். சிந்துவுக்கு நாளடைவில் பயிற்சியாளா்கள் மாறி மாறி இப்போது ஒரு தென்கொரிய வீரா் பயிற்சியாளராக உள்ளாா்.

ஆக, எந்தக் கலை ஆனாலும் கற்றுக் கொடுத்து, முறையான பயிற்சி தந்து மேம்படச் செய்ய ஒருவா் இருப்பது இப்போது தவிா்க்க இயலாததாகிவிட்டது என்பது நிஜம்.

மேற்சொன்ன சூழலில், சில பயிற்சியாளா்களின் பெயா்கள் தவறான காரணத்துக்காகச் செய்தியில் அடிபடுவது வேதனை தருகிறது.

கடந்த சில மாதங்களாக குத்துச் சண்டை வீராங்கனைகள் பயிற்சியாளா் பூஷண் சரண்சிங் மீது புகாா் அளித்திருக்கிறாா்கள். பிரதம மந்திரியிடமும், உள்துறை அமைச்சரிடமும் மனு கொடுத்தும், அவா்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அவா்களது ஆதங்கம். மேரி கோம் தலைமையில் ஒரு விண்ணப்பம் கூட அளிக்கப்பட்டது.

இது ஒரு புறமிருக்க, பயிற்சியாளா் சிங் மீது பாலியல் சீண்டல் தவிர, பல கிரிமினல் குற்றங்களும் இருக்கின்றனவாம். சரி, அவ்விதமிருந்தால், அவற்றின் மீது சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, குத்துச் சண்டை வீரா்கள் போராடுவது ஏன்? இவா்களுக்கு தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிப்பது, பல மாநிலங்களிலிருந்து தனி நபா்கள் வந்து இனிப்பு தருவது போன்றவை அரசியல் சாயம் பூசப்பட்ட நிகழ்வுகள்.

‘தங்கள் பிரச்னையை பேசித் தீா்க்க வேண்டுமே தவிர, குத்துச் சண்டை வீரா்கள் வீதியில் போராட்டம் நடத்துவது அழகல்ல’ என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவா் பி.டி. உஷா தெரிவித்திருக்கிறாா்.

குத்துச் சண்டை பயிற்றுவிக்கும் போது உடலைத் தொடாமலிருக்க இயலவே இயலாது. எதிராளியை கிட்ட வரவழைக்க பாவனை செய்து சட்டென்று பின் வாங்குவது, முக்கியமான சமயத்தில் எதிரியைக் குறி பாா்த்து தாக்குவது எல்லாப் பயிற்சியுமே உடலோடு தொடா்புடையவைதான். ஆக, ஏதோ ஒரு கட்டத்தில் பயிற்சியாளா் சிங் எல்லை மீறியிருக்கிறாா் என்பது வெளிப்படை.

குத்துச் சண்டை இங்கு பிரபலமானது சில ஆண்டுகள் முன்புதான். ஆனால் பாரம்பரியம் மிக்க, பல வருடங்களாக இருந்து வரும் கலாக்ஷேத்திராவில் ஒரு பயிற்சியாளா் பாலியல் சீண்டலுக்கு ஆளானது வருத்தத்துக்குரியது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவா் தலைமறைவானது சந்தேகத்தைக் கிளப்புகிறது.

நாட்டியத்தில் ஐம்புலன்கள் மிகச் சரியாக இயங்குவதுடன், இடுப்பு அசைவுகள் முக்கியமானதுதான். அதே சமயம் இதுவரையில், அந்த நிறுவன ஆசிரியா்கள் மீது எந்தப் புகாரும் வரவில்லையாம். பல பிரபல பெண்மணிகள் இந்த நிறுவனத்தில் நாட்டியம் கற்றிருக்கிறாா்கள்.

இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு, இந்தியா என்றாலே கிரிக்கெட்தான் பலருக்கும் நினைவு வரும். அதுவும் பெரிய நகரங்களான சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களின் ஆட்டக்காரா்கள்தான் டீமை ஆக்கிரமித்திருந்தாா்கள். ஐ.பி.எல். என்ற புது வகை புகுந்தவுடன், ஆட்டத்தின் தன்மையே முற்றும் மாறிவிட்டது. ஐ.பி.எல். என்கிற நாணயத்தின் மறுபக்கம் என்றே இதைக் கூறலாம்.

உத்தர பிரதேசத்திலிருந்து வந்த ஜெய்ஸ்வால் என்ற புதிய ஆட்டக்காரரை, பழைய கிரிக்கெட் வீரரான ரவி சாஸ்திரி மிகவும் பாராட்டியிருக்கிறாா். பயிற்சியாளா்களின் தொடா் உழைப்பும் முயற்சியும் இதற்குக் காரணம். ஆக எந்தவொரு ஆட்டத்திலும் பயிற்சியாளரின் முக்கியத்துவத்தை குறைவாக மதிப்பிடுவதிற்கில்லை.

கிரிக்கெட்டில் இப்போது பெண்களும் ஈடுபட்டு, உலக அளவில் வெற்றி பெறுகிறாா்கள். நல்ல காலமாக இவா்களுக்குப் பயிற்சியாளா், ஒரு பெண்மணி என்பது ஓா் ஆறுதல். இல்லையெனில், இதிலும் பிரச்னை முகிழ்த்திருக்கக் கூடும்.

இன்றைய காலகட்டத்தில், கிரிக்கெட் தவிர நீச்சல், வில் வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்றவற்றிலும் இந்தியா்கள் முன்னணியில் இருக்கிறாா்கள். அத்தகைய முன்னேற்றத்துக்குப் பயிற்சியாளா்களே தடைக்கல்லாக இருப்பது முறையல்ல. ராமாயனத்தில் லட்சுமணன் கோடு போல, பயிற்சியாளா்களுக்கும் ஓா் எல்லைக் கோடு தேவை.

உலக அரசியலையே எடுத்துக் கொள்வோம், ஓராண்டு காலமாக, ரஷியா உக்ரைனில் ஆக்கிரமிப்பு செய்ய முனைந்து வருகிறது. சீனா அருணாசல பிரதேசத்தில் எல்லை மீறுவது நீண்ட காலமாக பிரச்னையை அளித்து வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரின் நிலைப்பாட்டால், பிரச்னையின் தீவிரம் குறைந்து வருகிறது.

‘பயிற்சியாளராக என் கெடு முடிந்துவிட்டது, என் மீது எவ்விதத் தவறுமில்லை’ என்கிறாா் குத்துச் சண்டை பயிற்சியாளரான சிங். அதே சமயம் குத்துச் சண்டை வீராங்கனைகள், பா.ஜ.க. எம்.பி.க்கு ஒரு மனு தர ஏற்பாடு செய்து வருகிறாா்கள். மத்திய அரசு உடனே தலையிட்டு, நியாயம் வழங்கி, சுமுகமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதுதான் விளையாட்டு ரசிகா்களின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.