கொசுக்களால் பரவும் வைரஸ்
இந்தியாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பருவ மழையுடன் சேர்ந்து ஜிகா வைரஸ் பாதிப்பிற்கான சாத்தியங்களும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.


இந்தியாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பருவ மழையுடன் சேர்ந்து ஜிகா வைரஸ் பாதிப்பிற்கான சாத்தியங்களும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.
வைரஸ் பாதித்தால் காய்ச்சல், தலைவலி வரும். இதற்காகவா இவ்வளவு பில்டப் என்று நினைக்கலாம். கொஞ்சம் பொறுங்கள். ஜிகா குறித்த திகில் தகவல்களை சென்னை மெடிக்கல் மிஷன் மருத்துவமனை மைக்ரோ பயாலஜிக்கள் நிபுணர் டாக்டர். அனுஷா ரோகித் சொல்வதைப் பார்க்கலாம்.
ஆப்பிரிக்க நாட்டில் உள்ள உகாண்டா காடுகள் தான் இதன் பூர்வீகம். பிரேசிலில் இதன் பாதிப்பு அதிகம். ஜிகா வைரஸ் பாதிப்பு எந்த நாட்டில் அதிகம் உள்ளதோ அங்கு செல்லும் மக்களை இந்த வைரஸ் எளிதில் தொற்றிக் கொள்ளும்.
சமீபத்தில் குஜராத்திலிருந்து ஜிகாவின் பூர்வீக நாட்டிற்கு போய்வந்த 10 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்புள்ளதை மருத்துவத்துறை உறுதிபடுத்தியுள்ளது.
ஏடிஸ் கொசுக்கள் தான் ஜிகாவை பரப்பும் ஏஜெண்டுகள். பகலில் வைரஸை பரப்புவதுதான் கொசுக்களின் சிறப்பு ஏற்பாடு. இரத்தம் வழியாக பரவும் ஜிகா தொற்றினாலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் உடனே பதிப்பு தெரியாது.
கொஞ்சம் வலுவான பின்னர்தான் காய்ச்சல், தலைவலி, தோள் தடித்தல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். ஜிகா வைரஸ் தாம்பத்திய உறவு வழியாகவும் பரவும் என்பதுதான் சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்ட உண்மை.
ஜிகாவிற்கு சரியான தடுப்பு மருந்து உலகளவில் இதுவரை இல்லை. வழக்கமான ஆண்டிபயாட்டிக் மருந்துகளுடன் ஓய்வு, தீவிர கண்காணிப்பு மட்டுமே இப்போதைக்கு தப்பிக்கும் வழிமுறை. மழைக்காலம் வந்துவிட்டால் வீட்டைச் சுற்றிலும் நீர் தேங்கவிடக்கூடாது.
கழுத்தில் தொடங்கி பாதம் வரை உடையால் மூடிக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் எளிதில் உங்களை கடிக்கும் வாய்ப்பை ஏடிஸ் கொசுவிற்கு கொடுக்க வேண்டாம்.
ஜிகா வைரஸ் நம் உடம்பில் தங்கிவிட்டால் குயிலன்பேரிசின்ட்ரோம் என்ற பாதிப்பு ஏற்படும். இது உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தையும், நரம்பு மண்டலத்தையும் கடுமையாக சிதைத்துவிடும்.
இந்த பாதிப்புள்ள நபர்கள் பார்க்க நன்றாக இருப்பார்கள். ஆனால் நிமிர்ந்து தெம்பாக நடக்க முடியாது. கடுமையாக நரம்பு மண்டலத்தை பாதிக்கும். கை, கால், மூட்டுகளில் வலி ஏற்படும். கண்கள் சிவக்கும். அதிகபட்சமாக பக்கவாதம் வரை ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கற்பிணிப் பெண்களுக்கு ஜிகா வைரஸ் ஆகவே ஆகாது. கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை மோசமாக பாதிக்கும். குறிப்பாக கருவில் உள்ள குழந்தையின் மண்டையோடு வளர்ச்சியை மிக மோசமாக பாதிக்கும்.
இயல்பான குழந்தைகளை விட ஜிகா வைரஸ் பாதித்த குழந்தைகளின் மண்டை ஓடு சில செ.மீ அளவு குறைவாக இருக்கும்.
இந்த பாதிப்பிற்கு மைக்ரோசிபலி என்று பெயர்.
மைக்ரோசிபலி பாதிப்புள்ள குழந்தைகளின் மூளை வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படும். மூளையில் அழுத்தம் ஏற்படும். புத்தி மந்தம் மற்றும் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக செல்களின் வளர்ச்சியை பாதிக்கும். நரம்பு மண்டலத்தில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.
குழந்தைகள் வளர வளர இதுபோன்ற பிரச்னைகளும் அவர்களுடன் சேர்ந்தே வளரத் தொடங்கும். குறிப்பாக நரம்பு மண்டலம் வளராது. இதற்கான பரிசோதனைகள் அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் நடந்தாலும் வைரஸ் தன் வளர்ச்சியை மேம்படுத்திக் கொண்டே செல்கிறது.
மனிதர்களிடம் இந்த வைரஸ் பரவும்போது ஒவ்வொரு ஆண்டும் மனித இனத்தின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிதைத்து தன்னை அழிக்க முடியாத ஒரு வைரஸாக ஜிகா மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறது. இதனால் நிரந்தரமான தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த சில தகவல்கள்.
உகண்டாவில் உள்ள ஜிகா காடுகளில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயரால் ஜிகா வைரஸ் என்று பெயரிடப்பட்டது.
ஜிகா பிலாவியஸ் என்ற குடும்பத்தை சேர்ந்த வைரஸ். நம்ம ஊரின் டெங்கு, சிக்கன் குனியா காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்களும் பிலாவியஸ் குடும்பத்துடன் சம்பந்தம் வைத்துள்ளது.
பிரேசில் நாட்டில் ஜிகா பரவும் நேரத்தில் பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று பிரேசில் அரசே வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
இங்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டாலும் பயப்பட தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எப்படி முடியும்?
ஜிகா வைரஸ் கடுமையான பாதிப்புள்ள 5-ல் ஒருவருக்கு கில்லன்பாரி எனப்படும் மூளை தாக்குநோய் ஏற்படுகிறது.
எலீசா, பிசிஆர், ஐஜிஎம் மற்றும் ஐஜிஜி போன்ற பரி சோதனைகள் வழியாக ஜிகா பாதிப்பை கண்டுபிடிக்க முடியும்.
இவற்றிலிருந்து நாம் தப்பிக்க வேண்டு மென்றால் காற்றோட்டமான தனியறையில் முழு ஓய்வு எடுக்க வேண்டும். அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டும். உடுத்திய உடைகளை வெண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
ஜிகா பாதிப்புள்ள நபரை கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும். அவருக்காக அல்ல நமக்காக. பகலில் மட்டுமே ஏடிஸ் கொசு அதிகம் கடிக்குமென்றாலும் இரவிலும் கொசு நோய் பரப்பும் பணியை சரியாக செய்யும்.
எப்படி இருப்பினும் அழையாத விருந்தாளியாக ஜிகா என்ற இந்த ஆபத்தான நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்வர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...