சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மாற்றம் வருமா?

ஸ்காட்லாந்து காட்டிய வழியில் ஒரு கருத்து வாக்கெடுப்பை நடத்தத் தயாராகிறது நியூஸிலாந்து. பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி சுதந்திர நாடாக வேண்டுமா, பிரிட்டனுடனேயே தொடர வேண்டுமா என ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு நடத்தியது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:56 am

எஸ். ராஜாராம்

ஸ்காட்லாந்து காட்டிய வழியில் ஒரு கருத்து வாக்கெடுப்பை நடத்தத் தயாராகிறது நியூஸிலாந்து. பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி சுதந்திர நாடாக வேண்டுமா, பிரிட்டனுடனேயே தொடர வேண்டுமா என ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு நடத்தியது.

அதே பிரிட்டனின் அடையாளத்தை தனது தேசியக் கொடியிலிருந்து பிரிக்க வேண்டுமா கூடாதா என வாக்கெடுப்பு நடத்தவுள்ளது நியூஸிலாந்து. அந்த வகையில், இந்த இரண்டு வாக்கெடுப்புக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

ஊழல் குறைந்த நாடுகளுள் ஒன்று, கிரிக்கெட் விளையாடும் நாடுகளுள் ஒன்று என்று மட்டுமே பரவலாக அறியப்பட்ட நியூஸிலாந்தும் ஒரு காலத்தில் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுதான்.

பிரிட்டனின் ஆதிக்கத்துக்குள்பட்டதில் இருந்து கடந்த 122 ஆண்டுகளாக நியூஸிலாந்து நாட்டு தேசியக் கொடியில் பிரிட்டனின் யூனியன் ஜாக் அடையாளம் இன்றுவரை தொடர்கிறது.

"பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னரும் பிரிட்டனின் காலனி நாடு என்ற தோற்றத்தைத்தான் இக்கொடி பிரதிபலிக்கிறது, நவீன நியூஸிலாந்தை பிரதிபலிக்கவில்லை' என ஒரு தரப்பு மக்கள் கருதுகின்றனர்.

சுதந்திரமான நியூஸிலாந்தைப் பிரதிபலிக்கும் வகையில் கொடியை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்து சுமார் 10 ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இருப்பினும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜான் கீ இந்த விஷயத்தை கையிலெடுத்த பின்னர் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அந்நாட்டுப் பிரதமராக கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றதுமே, மீண்டும் இந்த விவகாரம்குறித்துப் பேசினார் ஜான் கீ.

"122 ஆண்டுகளாக நம் நாட்டுக் கொடியில் இடம்பெற்றுள்ள பிரிட்டனின் யூனியன் ஜாக் அடையாளம் தொடர வேண்டுமா என்ற விஷயத்தில் மக்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். இதற்காக அடுத்த ஆண்டு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும்' என ஜான் கீ அறிவித்தார்.

கருப்பு நிற பின்னணியில் வெள்ளை நிற இலைகளுடன் கூடிய கொடியை ஜான் கீ பரிந்துரை செய்கிறார். இதையே இப்போதைய நியூஸிலாந்து விளையாட்டு அணிகள் பயன்படுத்துகின்றன.

இதுபோல மேலும் பல வடிவமைப்புகளும் தயாராக இருக்கின்றன. புதிய கொடியை வடிவமைப்பதற்காக போட்டியே நடத்தப்பட்டுள்ளது.

ஒரு சுதந்திர நாடு தனக்கு ஏற்றாற்போல தேசியக் கொடியை வடிவமைப்பதில் என்ன பிரச்னை இருக்கப்போகிறது என்று தோன்றலாம்.

ஆனால், பிரிட்டனின் அடையாளத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? ஏன் தொடர வேண்டும் எனப் பல்வேறு கருத்துப் பிரதிவாதங்கள் ஸ்காட்லாந்தைப் போலவே இங்கும் உள்ளன.

"நியூஸிலாந்தின் தேசியக் கொடி, ஆஸ்திரேலியாவின் தேசியக் கொடி போன்றே இருக்கிறது. இது பலரை குழப்பமடையச் செய்கிறது.

1984-ஆம் ஆண்டு, அப்போதைய ஆஸ்திரேலிய பிரதமர் பாப் ஹாகே ஒட்டாவா நகருக்குச் சென்றபோது, கொடிக் குழப்பத்தால் ஆஸ்திரேலிய கொடிக்குப் பதிலாக நியூஸிலாந்து கொடி காட்டப்பட்டு வரவேற்கப்பட்டார்.

இப்போதைய கொடி நியூஸிலாந்தின் பாரம்பரியத்தைப் புறக்கணிக்கிறது' என்பது எதிர்ப்பாளர்களின் வாதம்.

"ஐக்கிய பிரிட்டனுடனான நியூஸிலாந்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை இக்கொடி பிரதிபலிக்கிறது. பல போர்களில் நியூஸிலாந்து நாட்டு வீரர்கள் இந்தக் கொடியின் கீழ் தான் போரிட்டு, உயிர் துறந்துள்ளனர்' என்பது கொடி தொடர வேண்டும் என்ற ஆதரவாளர்களின் வாதம்.

தேசியக் கொடியை மாற்றி அமைக்க வேண்டுமா என இதற்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் கொடி அப்படியே தொடர வேண்டும் என்பதே பெரும்பான்மை கருத்தாக இருந்துள்ளது.

இருப்பினும் இப்போது கொடியை மாற்றுவதில் நாட்டின் பிரதமரே உறுதியாக இருப்பதால் கருத்து வாக்கெடுப்பில் முடிவு மாறக்கூடும்.

மேலும், பிரிட்டனின் காலனி ஆதிக்க அடையாளத்தை நீக்கும் வகையில், கனடா தனது தேசியக் கொடியில் பிரிட்டனின் யூனியன் ஜாக் அடையாளத்தை எடுத்துவிட்டு கொடியை மாற்றி வடிவமைத்துள்ளதை முன்னுதாரணமாகக் காட்டுகிறார் ஜான் கீ.

சுமார் 45 லட்சம் மக்கள்தொகை கொண்ட நியூஸிலாந்து ஒரு கருத்து வாக்கெடுப்புக்குத் தயாராகிறது. மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்களும் கருத்துத் தெரிவிக்கின்றன. ஸ்காட்லாந்து வாக்கெடுப்பில் பிரிட்டன் வென்றது.

ஆனால், நியூஸிலாந்து வாக்கெடுப்பில் பிரிட்டன் வெல்லுமா என்பது கேள்விக்குறியே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.